தேவையான பொருட்கள்
ஸேஜ் இலைகள் (அல்லது புதினா இலைகள்) 6
பார்ஸ்லி இலைகள் (அல்லது கொத்தமல்லி தழை) தூள் ஒரு கோப்பை
ஒரு கோப்பை வேகவைத்த கொண்டைக்கடலை
பூண்டு நாலைந்து பற்கள்
செமோலினா பாஸ்டா (அல்லது மாக்கரோனி நூடுல்ஸ்) கால் கோப்பை வேகவைக்காமல்
தக்காளி 2
ஆலிவ் எண்ணெய் (அல்லது வெண்ணெய்) ஒரு மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
செய்முறை
1) பாதி கோப்பை கொண்டைக்கடலையை தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொள்ளவும்
2) இலைகள், வெங்காயம், பூண்டு போன்றவற்றை தூளாக நறுக்கிக்கொள்ளவும்
3) தக்காளியை மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக்கொள்ளவும்
4) எண்ணெயைக் காயவைத்து இலைகளையும் பூண்டையும் போட்டு வதங்கியவுடன் வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.
5) மீத முழு கொண்டைக்கடலையும் அரைத்த கொண்டைக்கடலை விழுது, தக்காளி கூழ் போட்டு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு மிளகாய் பொடி போட்டு கொதிக்க விடவும்.
6) கொதிக்கும்போது, அதில் துண்டு துண்டாக பாஸ்டா அல்லது மாக்கரோணி போட்டு அவை நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்.
7) இறுதியாக கொஞ்சம் கொத்தமல்லித்தழை போட்டு இறக்கி பறிமாறவும்.
ரொட்டித்துண்டுகளை வெண்ெணையில் ரோஸ்ட் பண்ணி இத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- இருட்டு பேசுகிறது!
- பிறவழிப் பாதைகள்
- இலங்கைத் தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் கனடாவில் வெளியீட்டு விழா
- கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்
- கார தேன் கோழிக்கால்கள்
- இத்தாலிய கொண்டைக்கடலை சூப்
- கணித மேதை ராமானுஜன்
- மின் அஞ்சல்
- சாக்கடையில் போகும் ஒளிநாறு தொழில்நுட்பம் (Broadband)
- ஆந்த்ராக்ஸ் விஷத்தின் ஆதாரக்காரணம்
- குஜராத்தின் ‘பூகம்பம் தாங்கும் வீடு ‘
- புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்கள்
- கேள்வி
- அன்பு என்ற அமுதம்
- மனைவி!
- மரணம்
- இதற்கும் புன்னகைதானா… ?
- என் வீட்டருகே ….
- அப்பா
- அது அந்தக் காலம்….
- துயரம்
- இந்த வாரம் இப்படி – ஜனவரி 27, 2002 (புத்தக விழா, ஆண்டிப்பட்டி, அக்னி, மனோரமா)
- புதிய சமுதாயமும் இளைஞர்களும்
- முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு தேவையான பதவிக்கால வரையறை (term limits)
- தலைவர்களே படிக்காதீர்கள் .. பேசுங்கள்
- ‘நந்தன் வழி ‘ பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்
- தெரியாமலே