ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

குரு ராகவேந்திரன்


ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து திண்ணையில் அநேகம்பேரால் விமர்சிக்கப்பட்டது. புதிய மாதவிக்கும், படிக்கும் அனைவருக்கும் மிகத்தெளிவாக ஒன்றை கூற விரும்புகிறேன்.

ஆதி சங்கரர் திராவிட சிசு எனச் சொன்னது திராவிட இனத்தை சேர்தவர் என்று சொல்ல அல்ல. திராவிட என்பது வெறும் தென்பகுதியைததான் குறித்தது. காரணம், ஞானசம்பந்தர், இனவாதிகளால் குறிப்பிடப்படும் ஆரியர் என்னும் பிராமண குலத்தைச் சேர்ந்தவர். ஆரியகுலத்தைச் சேர்ந்தவரை “திராவிடர் ” என ஏன் ஆதிசங்கரர் குறிப்பிடவேண்டும்? ஏனென்றால், அவர் காலத்தில் ஆரிய குலம், திராவிட குலம் என்ற இனப்பாகுபாடு இல்லை என்பது மிகமிகத் தெளிவாக விளங்கும்.

நமது தேசிய கீதத்தில்கூட பஞ்சாப, சிந்து,குஜராத, மராட்டா என்று சொல்லி திராவிட எனும்போது அது தென்பகுதியைத் தான் குறித்ததே தவிர திராவிட இனம் என்று சொல்லவில்லை.

திராவிட இனம் என்பது புதிதாக முளைத்து மதம், பிரிவினை, அரசியல் மற்றும் ஓட்டு காரணங்களுக்காக வளர்க்கப்பட்டது.

எனவே ஆதிசங்கரர் திராவிட இனத்தை குறிப்பிட்டார் என்பது முழுக்க முழுக்க தவறான புரிதல் என அனைவருக்கும் தெளிவுபடுத்துகிறேன். “திராவிட சிசு” என்பது “தென்பகுதியின் குழந்தை” எனப் பொருளாகும்.

தெற்கை திராவிட தேசம் என்பது போன்று வடக்கே உத்திர (வடக்கு) பிரதேசம் இருக்கிறது.

தெற்கே இருப்பவர்கள் திராவிட இனத்தவர் என்றால் இந்தியாவின் வடபகுதியில் இருப்பவர்கள் எல்லாம் ஆரிய இனத்தவர்களா? இல்லை என்றால் வடக்கே வாழ்ந்தவர்கள்/வாழ்பவர்கள் எல்லாம் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என யோசித்தால் ஆரிய-திராவிட கட்டுக்கதை சுலபமாக விளங்கும்.

வடக்கே வாழ்ந்தவர்களும் திராவிடர்களே அதாவது இந்தியா முழுவதும் தென்னாட்டவர்கள்தான் வாழ்ந்தார்கள் என்று கடி ஜோக்கடிக்க கூடாது.

பிராமண குலத்தை சேர்ந்தவரை திராவிட சிசு என்று ஆதிசங்கரர் அழைத்ததின் மூலம் பிராமணர்கள் திராவிட இனத்துக்கு மாறான ஆரியர் இனத்தை சேர்தவர்கள் என்பது பொய்யாகிறது. பின்பு ஆரிய இனத்தவர் யார்? இப்போது எங்கே இருக்கிறார்கள்?

விவரம் அறிந்தவர்கள் திசைதிருப்பாமல் தெளிவுபடுத்தி பதில் எழுதலாம்.

ஆரிய-திராவிட கோட்பாட்டை நசுக்கும் “திராவிட சிசு” பற்றி எழுதியதற்காக புதிய மாதவிக்கு நன்றி.

குரு ராகவேந்திரன்

Series Navigation

குரு ராகவேந்திரன்

குரு ராகவேந்திரன்