அலைகளின் விளிம்பில்

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

நீ”தீ”


ஜனனித்த தருணத்திலே
எழுதியேனும் வைக்கப்பட்டதோ
எங்களின் சுவாசிப்புகள்?
மருந்துக்களின் நெடியினூடே
இருதுருவங்களின் ஈர்ப்புகளால்
இடமா வலமா எனும் யோசனையில்
சமுத்திரத்தின் நிச்லனத்தினூடே
மர்மமான முறையில் தொடர
எனக்களிக்கப்பட்ட வீடோ
ஆர்பரிக்கும் அலைகளினூடே
கடவுளின் கண்ணீர்துளியாய்
காட்சிதருகிறது!
கட்டப்பட்ட கடவுளின் கையை
மௌனமாக உலகம்
பார்த்துக் கொண்டிருக்கிறது

ஆக்கம்: நீ”தீ”

hsnlife@yahoo.com

Series Navigation

நீ “தீ”

நீ “தீ”