அனிதா கவிதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

அனிதா


முயன்று பார் வெற்றி நிச்சயம்
—-
முயன்று பார் — உன்
வெற்றிப்பாதையில் உள்ள முட்களும்
பூக்களாய் மாறும் !

முயன்று பார் — எட்டாத
இந்த வானம்கூட உன் அருகில்
வந்து குடை பிடிக்கும் !

முயன்று பார் — பாலைவனத்தில்
வீசும் புயல்காற்றும்கூட
தென்றலாக மாறும் !

முயன்று பார் — காட்டுத்தீகூட
தீபமாக மாறி
உனக்கு வழிகாட்டும் !

முயன்று பார் — சூரியனை
சுற்றும் அந்த பூமியே நாளை
உன்னையும் சுற்றி வரலாம் !

மனைவியின் ஆசை
—-
என் வெற்றிக்கு முன்
நீயிருக்க ஆசை
ஆனால்
கல்லறையில் மட்டும்
உனக்கு முன் நானிருக்க ஆசை !

காதல்
—-
எதுவும் தொலையாது
ஆனால்
அடிக்கடி தேடுவாய்

கல்யாணம்
—-
எல்லாமே தொலைந்துவிடும்
ஆனால்
எதையுமே தேடமாட்டாய்

sent by: ruminagore@yahoo.com

Series Navigation

அனிதா

அனிதா