எஸ். அரவிந்தன் நீலகண்டன்
சாண எரி வாயு கலன் வெறும் எரிபொருள் அளிக்கும் தொழில்நுட்பமாக மட்டும் செயல்படவில்லை. காந்திய பொருளாதார சிந்தனையாளரான குமரப்பா ‘சாண எரிவாயுகலன் என்பதனை விட கொல்லைப்புற உர உற்பத்தி மையம் எனலாம் என சாண எரி வாயு கலன் குறித்து கூறினார். இன்று வரையிலான பல ஆராய்ச்சிகள் குமரப்பாவின் இக்கூற்றினை உறுதிப்படுத்துகின்றன.
தானிய விதை பூச்சில் தொடங்கி விளைச்சலை கூட்டும் உரமாக வரை சாண எரிவாயு கழிவின் பயன்பாடு விவசாயிகளுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாகும். வேதி உரங்கள் மண்ணின் வேதி சீர்மையினை குலைத்துவிடுகின்றன. ஒரு பயிரின் வாழ்வுச்சுழலின் முக்கிய தருணங்களில் நுண்சத்துக்கள் (micronutrients) முக்கியமானவையாகும். (பொதுவாக மண் முக்கிய உயிர் சத்துக்களுடன் இந்த நுண் சத்துக்களும் கொண்டு விளங்குகிறது. மண் என்பது பரிணாமம் அடைந்து கொண்டிருக்கும் ஓர் அதி உயிரி என்றே கூறலாம். பல நுண்ணுயிரிகளும், பருவமும், சீர்மையான மானுட தாக்கமுமாக கல்பங்களாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அதி உயிரி. மட்டற்ற வேதி உர பயன்பாடு இவ்வுயிர்தன்மையின் முக்கிய தன்மையான மீள் உருவாகும் சீர்மையினை குலைத்து கொன்றுவிடுகிறது என்று கூறலாம்.) இன்றைய அதிக விளைச்சல் கண்ணோட்ட விவசாயத்தில் பல கிராம மண்களில் கட்டற்ற வேதி உர பயன்பாடு மண்ணின் உயிர்த்தன்மையினை கொன்று வருகிறது.
இரண்டாவது உலகப் போரில் பல மேற்கத்திய தொழிற்சாலைகள் TNT உருவாக்க தொடங்கப்பட்டன என்றும், போரின் முடிவாலும் அணு ஆயுத உற்பத்தியாலும் காலாவதியாகிப் போன இத்தொழிற்சாலைகளிலிருந்து உருவாக்கப்பட்ட நைட்ரேட்க்கு சந்தைகள் உருவாக்க யூரியா சார்ந்த விவசாய தொழில்நுட்பம் வளரும் நாடுகளில் புகுத்தப்பட்டதென்றும் சில சுற்றுப்புற சூழல்வாதிகள் கூறுகின்றனர் (உதாரணமாக வந்தனா சிவா மற்றும் எலிசபெத் சக்தோரிஸ்). இது எந்த அளவு உண்மை என்பது ஆய்வுக்குரியது என்றாலும் மேற்கத்திய அதி ஆற்றல் மூலம் உற்பத்தியாகும் யூரியாவினை வாங்கி தன் நாட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்க வேண்டிய நிலையில்தான் பாரத அரசும் அரசியல் சமன்பாடுகளும் உள்ளன என்பதே உண்மை. யூரியா விலை உயர்வு குறித்து கோஷம் எழுப்பும் பல ‘இடது சாரி ‘ விவசாயிகளின் தோழர்கள் ஏதோ ஒரு மேற்கத்திய முதலாளியின் பையை இந்திய பணத்தால் நிரப்புவதும் ஒரு சோக நகைச்சுவை. இதற்கு நாம் கொடுக்கும் விலை அந்நிய செலாவணியில் மட்டுமல்ல நம் மண்ணின் உயிர் சத்துக்கள் முலமாகவும்தான்.
இந்நிலையில் சாண எரிவாயு கழிவு பல ஆய்வாளர்களால் வேதி நைட்ரஜன் உரங்களுக்கு சரியான மாற்றாக இருக்க முடியும் என நிரூபிக்க பட்டுள்ளது. சாண எரிவாயு கழிவில் மூல சாண கலவையின் 70% நிறையும் , 99% சதவிகித நைட்ரஜனும் வந்துவிடுகிறது. இக்கழிவு உரமாக மட்டுமல்லாது மண்ணின் ஒரு முக்கிய குணமான நீர் மற்றும் நேர்மின் கூறு கொண்ட மூலக்கூற்று பிரிவுகளை (கேட்டியான்கள்,cations) தன்னில் நிறுத்தும் தன்மையை உயர்வடைய செய்கிறது. புது டெல்லியின் IIT 1993 இல் உத்தரபிரதேச கிராமம் ஒன்றில் நடத்திய ஆய்வின் படி (அதாவது கோ மூத்திரத்தத்தையும் சாணியையும் ஆராய
அறிவியலாளர்களை காவி பாசிஸ்ட்கள் கட்டாயப்படுத்துவதாக நம் இடது சாரி ஞாநிகள் மற்றும் ஞானிகள் , [தாம்சன் அண்ட் தாம்ப்சன் போல], கரித்துக் கொட்டுவதற்கு முந்தைய காலகட்டத்தில், நடத்தப்பட்ட ஆய்வு) வேதி உரங்கள் 5லிருந்து 10 சதவிகிதம் கள பயன்பாட்டில் சாண எரிவாயு கழிவு பயன்பாட்டால் குறைக்கப்பட்டுள்ளது. இதைக்
காட்டிலும் இந்த அளவு கூடலாம். ஆனால் பொதுவாக விவசாயிகள் வேதி உரங்களின் அளவினை மிகவும் குறைக்க பயன்படுகின்றனர். பாரதம் முழுவதும் நடத்தப்பட்ட கள ஆய்வுகளிலிருந்து ஒன்று தெளிவாகிறது. அதிக விளைச்சல் தரும் தானிய வகைகளை பயன்படுத்துகையில் வேதி உரங்கள் அத்யாவசியமாகின்றன. ஆனால் சாண எரிவாயு கழிவு உர தொழில்நுட்பம் நிச்சயமாக மிகச் சிறந்த முறையில் இவ்வேதி உர பயன்பாட்டினை குறைக்க முடியும். உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பொருந்திய தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட கள ஆய்வில் பயிர் சுழற்சியில் அறுவடைக்கு அப்பால் வயலில் விதைக்கப்படும் பயரு விளைச்சலில் சாண எரிவாயு கழிவின் தாக்கமும் அது அற்ற வேதி உரங்களின் தாக்கமும் கண்டறியப்பட்டது. அவ்வாய்வறிக்கையிலிருந்து ஒரு பகுதி, ‘ சாண எரிவாயு கழிவு ஹெக்டேருக்கு 10 டன் + 50% NPK வேதி உரங்கள் 14 வது நாள் மிக அதிக வேர் நீள வளர்ச்சியினை ஏற்படுத்தின. ஆனால் வேதி உரங்களற்ற சாண எரிவாயு கழிவு ஹெக்டேருக்கு 10 டன் பயன்பாடு அறுவடைக்கு பின் மிக அதிக வேர் நீள வளர்ச்சியினை உருவாக்கிற்று. பல விகிதங்களிலான வேதி உர பயன்பாடு வேர் நீள வளர்ச்சியினை ஏற்படுத்தவில்லை என்பதுடன் எதிவிளைவினையும் ஏற்படுத்தியது. (வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் தக்கவைக்கும்) வேர் (நுண்ணுயிரிகளால் ஏற்படும்) கோளங்கள் (root nodules)சாண எரிவாயு கழிவு ஹெக்டேருக்கு 10 டன் + 50% NPK பயன்பாட்டில் , வெறும் வேதி உரபயன்பாட்டினைக்காட்டிலும் 5 மடங்கு அதிக அளவில் இருந்தது. வேதி உரங்களற்ற சாண எரிவாயு கழிவு ஹெக்டேருக்கு 10 டன் பயன்பாடும் வேதி உர பயன்பாட்டின் போதினை விட வேர் கோளங்கள் அதிகமாக இருந்தன. ‘ பயிர் சுழற்சியிலும் முதல் பயிருக்கு இடப்படும் கழிவு உரம் பின்வரும் பயிருக்கு பலனளிக்கிறது. அலிகாரில் நடத்தப்பட்ட கனாடிய தன்னார்வ அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வு காய்கறி விளைச்சலில் வேதி உரங்களுக்கு பதிலியாக சாண கழிவினை பயன்படுத்தியது. தக்காளி, முட்டைகோஸ், பச்சை பட்டாணி, உள்ளி, மற்றும் காலி ப்ளாவர் ஆகியவற்றின் சாகுபடிகளில் இப்பதிலி பயன்பாடு சிறந்த சாகுபடியினை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது. திருவில்லிபுத்தூரின் விவசாய ஆய்வு மையத்தை சார்ந்த ஆய்வாளர் திரு.கந்தசாமி இத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து பின்வருமாறு கூறுகிறார்,
‘கிராம மேம்பாட்டின் மிக அவசிய விஷயம், எரிபொருள் மற்றும் உரம் கிடைப்பதாகும்.எனவே சாண எரிவாயு தொழில் நுட்பம் ஓரு முழுமையான கிராம மேம்பாட்டிற்கு அவசியமாகும். விவசாயம், கிராம சுகாதாரம், கூட்டுறவு பால் உற்பத்தி ஆகிய பலவற்றுடன் பின்னி பிணைந்ததோர் தொழில்நுட்பம் இது. சாணம் ஒரு சாண எரி வாயு கலன் ஊடாக பயணித்து கழிவாக வெளிவருகையில் 30 லிருந்து 40 % கூடுதல் ஆற்றல் அளிக்கிறது என்பது மட்டுமல்ல, அதே சாணத்தை நேரடியாக நீங்கள் மண்ணில்
உரமாக பயன்படுத்தினால் கிடைப்பதைக் காட்டிலும் 35% முதல் 45% கூடுதல் நைட்ரஜனையும் மண்ணிற்கு அளிக்க முடியும். ‘
நாராயண தேவ்ராவ் பண்டரிபாண்டே என்கிற 84 வயது பெரியவர் இப்பயன்பாடு தேசிய அளவில் முழுமை அடையவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளவர். இவரால் சீரமைக்கப்பட்ட சாண எரி வாயு கழிவினை உரமாக்கும் முறை நாடெப் முறை என வழங்கப்படுகிறது. இவரே மரியாதையாக ‘நாடெப் காகா ‘ என அழைக்கப் படுகிறார். குமரப்பாவால் ஈர்க்கப்பட்டு 30 வருடங்களாக இந்த ஆராய்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர் இவர். ஒரு பசுவின் சாணத்திலிருந்து டன்னுக்கு வெறும் 1000 ரூபாய் செலவில் 80 டன் உரம் உருவாக்கமுடியும் என நிரூப்பிக்கிறார். இவரது வார்த்தைகளில் ‘பாரதம் 240 கோடி டன்னுக்கு உரம் உற்பத்தி செய்ய முடியும். மேலும் 8 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு ரூபாய்.1,40,000 கோடி தேசிய வருமானத்திற்கு அதாவது தனிநபர் ஊதியம் Rs.1,600 உயர்வடைவு மேலும் வேதி உர உற்பத்தியாளர்கள் தேச பொருளாதாரத்தின் குரல்வளையை பிடிப்பதிலிருந்து விடுதலை. ‘ என அடுக்குகிறார் இவர். சர்வதேச அளவில் நாடெப் சாண கழிவுர உற்பத்தி மிகத் திறமையானதாக அறியப்பட்டுள்ளது. இந்த வயதிலும் இவர் ஆர்வத்தின் ஊற்றாக விளங்கும் ‘கோமயே வஸதே லஷ்மி பவித்ர சர்வ மங்களா ‘ எனும் ரிஷிகள் வாக்கினை விளக்குகிறார், ‘பசுவில் முழுமையும் நன்மை அளிப்பதுமான செல்வத்தின் திருமகள் உறைகிறாள் ‘. (ஜோசப் கர்னீலியஸ் குமரப்பா முதல் அவரால் உருவாக்கப்பட்ட நாராயண தேவ்ராவ் பண்டரி பாண்டே வரை பசு பொருளாதாரத்தின் தேசிய முக்கியத்துவத்தை முழுமையை நமக்கு மீண்டும் மீண்டும் விளக்கி வருகின்றனர். ஆனால் ஸ்டாலினிய பொருளாதாரத்தை பாரதத்தில் செயல்முறை படுத்தி பின்னர் அதன் விளைவை ‘ஹிந்து வளர்ச்சி வேகம் ‘ என
நம்மையே குறை கூறி இன்று பெப்ஸியில் சூடாறும் பொருளாதார மேதாவிகளும், பாரத மண் சார்ந்த எந்த அறிவையும் கொச்சைபடுத்தும் ஞாநி/னிகளும் இவ்வுண்மையை உணர்ந்துய்வதெக்காலம் ?)
இவையெல்லாம் இத்தொழில் நுட்பத்தின் முழுமை பயன்பாட்டின் விளைவுகளாக அறியப்படுபவை. ஆனால் கள பயன்பாட்டில் இத்தொழில்நுட்பம் எந்த அளவு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது ?மற்றும் அரசின் உதவி அல்லது உதவியின்மை இது நம் கிராம வாழ்க்கையுடன் இணைவதை எந்த அளவு உதவுகிறது என்பதும் அறியப்பட வேண்டும்.
எஸ். அரவிந்தன் நீலகண்டன்
பயன்படுத்தப்பட்ட ஆய்வுகள்:
1. Studies of Residual Effect of Organic Manures and Inorganic Fertilizers on Blackgram.
G. Santhanakumar, V. Kanthaswamy amd T.Muthumaneksha,
பொருந்திய தொழில்நுட்ப ஆய்வு மையம், நாகர்கோவில்
2. Biogas Slurry Experiment,
Raymond M.Myles,Rajen Sundaresan and T.C.Sharma
Action for Food Production, New Delhi.
3. Effect of Bioெdigested Slurry in Rice,
V.Kanthaswamy,
திருவில்லிபுத்தூர் விவசாய ஆய்வு மையம்
இவ்வாய்வுகள் வெளியான நூல்:
Biogas Slurry Utilisation,
Consortium on Rural Technology,
புது டெல்லி, 1993.
- இயல்பும் இன்பமும் (மா. அரங்கநாதனின் ‘சித்தி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 54)
- ஆசை முகம் மறந்து போச்சே!!
- ‘Shock and Awe ‘
- அறிவியலுக்கு வெளியே மனது.
- உடம்பை வெட்டி எறி – உரைவெண்பா
- அறிவியல் துளிகள்-20
- பாரதம் தயாரித்து நிறுவும் முதல் 500 MWe பேராற்றல் அணுமின் நிலையங்கள்
- அணு உலைகளுடன் பல் குத்தும் துரும்பையும் குறித்து: 4 – சாண எரி வாயு கலனும் கிராம பொருளாதார மேம்பாடும்
- சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல்
- மடையசாமி மாட்டிகிட்டான்…
- அணு உலைகளுடன் பல் குத்தும் துரும்பையும் குறித்து: 4 – சாண எரி வாயு கலனும் கிராம பொருளாதார மேம்பாடும்
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 17 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- பரதநாட்டியம் – சில குறிப்புகள் – 3
- பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும்.
- வானத்தின் மழை
- விளிம்புகளில் நிற்பவர்கள்
- …வும், முடிவும், விடிவும், முடி…
- சகுனம்
- வீசிவிடு தென்றலே…
- உயிரைத் தேடாதே !
- அதற்காக….
- பெண்ணே!
- தமிழ்நாட்டுப்பாடநூல் கழகம் 1996 இல் வெளியிட்ட சமூக அறிவியல் (ஒன்பதாம் வகுப்பு) பாடநூல்
- நினைத்தேன். சொல்கிறேன். கொடிகளும், கோமாளிகளும்
- போர் நாட்குறிப்பு – 29 மார்ச் 2003
- ஜார்ஜ் டபிள்யூ புஷ் : தீவிரவாத கிரிஸ்தவ மத அடிப்படைவாதி
- ஹாங்காங்கில் நடந்த ஈடிபஸ் நாடகம்
- ரம்ஸ்ஃபீல்ட் உருவாக்கிய போர்முறைக்கு ஒரு பரிசோதனை.
- வளைகுடா போரும் கம்யூனிஸ்டுகளும்
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?
- கடிதங்கள்
- பாசுவின் தவம்
- ஆத்மசாந்தி