அடை வேகுதே!

This entry is part [part not set] of 12 in the series 20010108_Issue


ஆசை ஆசைத்தம்பி






( ‘மனம் விரும்புதே உன்னை உன்னை ‘ என்ற சமீபத்திய திரைப்படப் பாடல் மெட்டில்)



அடை வேகுதே கல்லில் கல்லில் அடை வேகுதே

உள்ளிறங்காமலே வாயும் வயிறும் சண்டை போடுதே

நினைத்தாலே ஐயம் தானடி நெஞ்சில் ஓர் பயம் தானடி

ஐயையோ வேண்டாமடி உன் சமையல் ஆகாதடி (அடை)


அடடா நீ ஒரு அவியல் செய்தாய் அழகாய்த்தான் ஒரு சமையல் செய்தாய்

அடி வயிற்றை அது ஏனோ கலக்கியது

அதிலே என் உடல் தெளியும் முன்னே அன்பே உன்னை இன்னும் ஒரு முறை

சமைக்கும்படி யார் வந்துலுக்கியது

புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என் வயிறும்

என் வயிற்றில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும்

உயிர் போகுதே உயிர் போகுதே ஐய்யோ வலி உயிர் போகுதே

நினைத்தாலே ஐயம் தானடி நெஞ்சில் ஓர் பயம் தானடி

ஐயையோ வேண்டாமடி உன் சமையல் ஆகாதடி (அடை)


பசியோடு நான் இருந்ததுமில்லை பசித்தாலும் இன்று பரவாயில்லை

பாறை போல் என் வயிறும் கனக்குதடி

மலை நாட்டுக் கடும் பாறை போலே கனக்கும் எந்தன் வயிற்றின் மேலே

பொல்லாத உன் சமையல் கோபம் கொண்டதடி

சட்டென்று வயிற்று வலி வருமென்று சாப்பிடுமுன் தோணலயே

வயிற்று வலி வந்தால் என்ன செய்வதென்று ஒரு வைத்தியமும் தெரியலயே

உயிர் போகுதே உயிர் போகுதே ஐய்யோ பசி உயிர் போகுதே

நினைத்தாலே ஐயம் தானடி நெஞ்சில் ஓர் பயம் தானடி

ஐயையோ வேண்டாமடி உன் சமையல் ஆகாதடி (அடை)


***

Series Navigation