“பெயரில்லாத நண்பனின் கடிதம்”
கே.பாலமுருகன், மலேசியா
இன்றும்
அன்று போல
நண்பனின் கடிதம் வீடு
தேடி வந்திருந்தது!
பெயர் குறிப்பிடாத
ஒரு நண்பனின் கடிதம்!
நலத்தை விசாரிக்கிறான்
இலக்கியங்கள் பற்றி அருமையாகப்
பேசி சளிப்படைந்து கொள்கிறான்!
வேடிக்கையாக எழுதுகிறான்
சில இடங்களில் எழுத்துகளை
மௌனமாக்கி விடுகிறான்!
பெயர் எழுத வேண்டிய
இடம் மட்டும்
காலியாகிக் கிடக்கிறது!
பெயர் எழுத விரும்பாத
நண்பனின் கடிதமும்
அந்த நண்பனும்
எனக்குள்ளேயும் எனக்கு வெளியேயும்
ஓர் ஆழ்ந்த நிதர்சனத்தில்!
கே.பாலமுருகன், மலேசியா
bala_barathi@hotmail.com