வேத வனம் விருட்சம் 58

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

எஸ்ஸார்சி


யானே யமி
நீ என் சகோதரன் யமன்
நம் பிதா விசுவான்
என்னிலே நம் புதல்வனை
நிர்ணயிப்போம்
நீ என்ன சொல்கிறாய் யமா

நமக்கு மூலம் ஒருவன்
நீ யோ என் சகோதரி
அசுரனுக்கு விண்ணை வலிக்கும்
வீரப்புதல்வர்கள் இருக்கிறார்கள்
தூரமே இ¢ருந்தும் பார்ப்பவர்களாயிற்றே அவர்கள்

மனிதன் விரும்பா
இவ்வுறவை தேவர்கள் விரும்புகிறார்கள்
அனைத்தையும் பிறப்பித்தவன்
புதல்வியைத்தன் மணாளியாய்
கொண்டான் தானே
சொல்லேன் நீ
கணவனாய் வந்துவிடு உடன்

யமீ கேள் தெரியாதா உனக்கு
தண்நீர் தன் தாரமாக
சூரியன் நமக்குத் தந்தையானான்
நாமோ உடன் பிறந்தோர்

தந்தை நம்மை
புருடனாய் ப்பெண்டாய்
கருவிலே படைத்தான்
அவன் விருப்பம் அது
அறியமாட்டாயோ நீ

யமீ என்ன பேசுகிறாய்
யாருக்குத்தெரியும்
எது அவன் விருப்பமென்று
நரகம் காட்டி
மனிதர்களை நெறிப்படுத்தும்
நீ
இப்படியா பேசுவது

நாம் தேரின் இரு சக்கரங்கள்
உன் மீது
எனக்குக்காமம்
என் தேகம் உன் வசமாகும்

யமீ தேவலோக ஒற்றர்கள்
கண் கொட்டாமல்
இங்கே சுற்றித்திரிவதைப்பார்
விலகிச்செல் நீ
யாரிடமேனும் சென்று
பிணைந்து கொள் போ

யமீ யான்
யமா நின் மறுப்பை ஏற்கிறேன்
யமனுக்கு சூரியனே கண்களாகி
அவ்வப்ப்போது வருக
இரவு விண்ணோடும்
பகல் புவியோடும்
பிணையட்டும்

யான் சகோதரன்
பதியாவது எப்படிச்சாத்தியம் யமி
விட்டு விடு என்னை
பதியதாய் வரும் ஒருவனுக்கு
நின் தோள் தலையணை ஆகட்டும்

நாதன் அகப்படா எனக்கு
சகோதரன் எப்படிச் சகோதரன்
காமம் என்னைத்
தோற்கடிக்கிறதே
என் உடல் உன்னைத்தழுவிட
அவாவுவதைப் பார்

யான் சகோதரன்
என்னை விடு
பாவம் இது
யாரோடும் சென்று இன்பந்தேடு

யமா நீ ஆற்றல் ஒழிந்தோன்
மனம் தொலைத்தோன்
இதயம் இலி
நின்னை வேறு ஒருத்தி
குதிரை மீது கச்சை போல்
மரம் மீது படர் கொடி போல்
தழுவட்டும் இக்கணம்

யமி நின்னையே
மரம் தழுவு கொடியாய்
வேறு ஒருவன் தழுவட்டும்
நும் மனங்கள் இணைக
நன்மையொடு நலம்
வளம் விரவிப் பொலிக
நிறைக கலவி இன்பம் உமக்கு ( ரிக் 10/10)
——————————————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி