வேத வனம் விருட்சம் 15

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

எஸ்ஸார்சி


உலகம் நுகர் பொருள்
ஆன்மா அன்று
நுகர்வு துறத்தல்
உலகு துறத்தல்
நுகர்வு மீது வெற்றி
ஆன்ம லயிப்பு.

உணர்வுகளை வெல்
உடற்பசி வெல்
ஆன்ம ஞானம்
கை கொடுக்கும்
கிட்டிடும் பேரின்பம்
அணி சேர்க்கும்
ஆன்ம லயம்.

ஆன்மானுபவம்
ஆன்மானந்தம்
ஆடு குழந்தையாய்
இயற்கையின்
குழவி நீ

ஆன்ம ஒளி
தூயதிற் தூயது
இரண்டென்பது இல்லை
எல்லாம் நீ
சமநிலை அனைத்தும்.
ஆன்மஞானமே
பிரம்மம் பயில் அனுபவம்

தன்னை அறிதல்
தவிர்த்துப்மற பிற
பகுக்க முடியா
பெரும்பொருள்
பரம்பொருள்
மாசில்லா மனம்
பற்றுக உடன்.

செல் நீ உன்னுள்
பேரின்பம் பெறு
கிட்டும் விடுதலை
தன்னை அறிய
தந்திடும் விடுதலை -சொருபபோத உபநிசத்.

Series Navigation