வெள்ளித்திரை

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

பாலாமொழியில் எல்லாமே கச்சிதமாக இருந்தது போல் தோன்றியது. இதில் கொஞ்சம் முன்னே பின்னே.. இசை, பாடல்கள் அப்புறம் க்ளைமேக்ஸ் –
இவை மூன்றும் வெள்ளித்திரையின் பலவீனங்கள்.

இதில் ஒரு வித்தியாசமான ஒரு கோணம் தோன்றியது. இராமாயணக் கண்ணாடி அணிந்து பார்த்தால், வெள்ளித்திரை கொஞ்சம்
வேறு மாதிரித் தெரிகிறது. இராமாயணத்தில், இராவணன் திருடுவது சீதை. இங்கே கதை. இப்படித்தான் ஒரு ஆதர்ச மனிதன்
இருக்க வேண்டும் என்பது போல் சரவணன் – கதையின் இராமன். என்னாலேயே வாழ்க்கையை வெல்ல முடியும் – ஆனால்,
இராமன் வெல்ல வேண்டும் என்பதற்காக (இராமன் வாளுக்கு மாசென்று வீசினேன்..), அசோக வனம் (அண்ணன் வீடு)
செல்லும் சீதை. சில முரண்களும் உண்டு. ஒரிஜினல் இராவணன் அறிவாளி. கன்னையன் அறிவிலி. அங்கே அனுமன் சீதையைத்
தேடி அசோக வனம் சென்றான். இங்கே, அனுமன் வேடம் போடும் முஸ்லீம் (முரணுக்குள் முரண்) நண்பன், சீதையை
அசோக வனத்தில் கொண்டு போய் விடுகிறான். கணையாழிக்கு பதில் செல் போன்.

சரவணனாக வரும் ப்ரிதிவி ராஜ், ஏங்க வைக்கிறார். மிக அற்புதமான நடிப்பு. எதிர்வரும் பெண்ணின் சுடிதார் காற்றில் விலகுவது போல் இயல்பாக வெளிப்பட வேண்டும் சுயம் என்னும் ஜெயமோகனின் வார்த்தைகள் போல, படத்தில், சரவணணின் ஆளுமை
இயல்பாக மெல்ல மெல்ல வெளிப்படுவது மிக அழகு. ப்ரகாஷ்ராஜ் அருவருக்க வைக்கிறார். 7 ஆம் வகுப்பு படிக்கும் என் மகள்
சொன்னாள் “Yuk pa, he is grose” – ப்ரமிக்க வைக்கும் நடிப்பு. கோபிகா என்னும் பெண்மணி மீது நமக்கு வருகிறது மரியாதை. சரத்பாபு, சார்லி, பாஸ்கர் – மூவரின் பாகங்களும் மிகத் திறம்பட உருவாக்கப் பட்டுள்ளன.

DTS என்னும் பெயரில், நம் காதை பொத்திக்கொள்ள வைக்கும் சத்தத்தைத் தவிர்க்கலாம். இந்த genre படங்களுக்கு,
இதயம் வருடும் இசை தேவை. இளையராஜா இருந்திருந்தால்… என பெருமூச்சு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மொழியின்
இசை-பாடல் combination ம் ரொம்ப நல்லா இருந்தது. ஏன் மாற்றினீர்கள் ப்ரகாஷ்??

படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும், சரவணனின் தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. Hats off to prithvi and viji!!


bala@cavinkare.com

Series Navigation

பாலா

பாலா

வெள்ளித்திரை

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

இரா.பிரவீன் குமார்


திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த ஊடகம்,பொழுதுப்போக்கிற்காக தொடங்கிய இந்த வெள்ளித்திரை சமூகபோக்கிற்கும் காரணமாயிற்று, சமூக அவலங்களை பிரதிபளிக்கவும், பல சமயம் அந்த அவலங்களுக்கு விதையாகவும் இருக்கிறது.

இயல்பான நம் வாழ்க்கையின் பிரதிபளிப்பே சினிமா,அதையே சில நேரங்களில் சினிமாதனத்துடன் சற்று மிகைப்படுத்தி காண்பிக்கப்படுகிறது.அவற்றை சீர்ப் பிரித்து நல்ல செய்திகளை உள் வாங்கினால் தவறில்லை.ஆனால் நம்மில் பலருக்கு அதை சீர்பிரிக்க நேரமும் இல்லை அதற்கான எண்ணமும் இல்லை.

இந்த சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு நம் சமூகத்தில் கொடுக்கபட்டுள்ள இடம்,மிகைப்படுத்தி காண்பிக்கப்படுகிற அந்த சினிமாவை விட மிகைபடுத்தப்பட்ட இடம்.ஆம் அவர்களை ஏதோ சொர்கலோக வாசிகளைப் போலவும்,காணக்கிடைக்காத ஒரு உன்னதப் பொருளைப் போலவும் காண்கிறோம்.இதற்கெல்லாம் அவர்கள் உரியவர்களா என்றாள் நிச்சயம் இல்லை.அவர்களும் நம்மைப் போல் சாதாரன மானிடப்பிறவிதான். பின்னெதற்கு அவர்களை பார்க்கும் போதுமட்டும் ஒரு அசாதாரனப்பார்வை.நாம் பார்க்கும் இந்த பார்வையை அவர்கள் நன்கு பயன்ப்படுத்திகொள்கிறார்கள்.நான் அனைத்து சினிமாத்துறை நண்பர்களையும் சுட்டிகாட்டவில்லை,ஆனால் அதில் சராசரியை விட அதிகமானோர் சந்தர்ப்ப சுயநலவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்.

ரசிகர் மன்றம் என்ற பெயரில் நம் இளையர்கள் முடக்கப்படுகிறார்கள் / முடங்கியிருக்கிறார்கள்.அவனுடைய முழூமூச்சும்,கனவும் தன் அபிமான நடிகர்/நடிகையைப் பற்றித்தான் சுழன்று வருகிறது.நம் முதல் குடிமகன் கானச்சொன்ன கனவை இப்படியா காண்பது?.அவன் தன் நாட்டிற்கும், சமூகத்திற்கும் குறைந்தபட்சம் தன் வீட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தடம்புறண்டுகிடக்கிறான்.

தன் வீட்டிற்கு பால் வாங்க நேரமும்,பணமும் இல்லாத இளையதலைமுறை, “இளையதளபதி” படத்தின் முதல் நாள் அன்று “கட்அவுட்டிற்கு” பால் அபிஷேகம் செய்ய தன் உழைப்பையும் பணத்தையும் விரயம் செய்கிறான். இன்னும் சில இடங்களில் தன் வீட்டில் சோறு இல்லையெனினும் “தல” படத்திற்கு ‘பீர்’ அபிஷேகம் செய்வது இதன் உச்சகட்ட அவலநிலை.அவனது அகராதியில் சமூகப்பொருப்பு என்பது தன் அபிமான நடிகர்/நடிகை முதல் நிலையை அடையசெய்வது ஆனால் இதனால் அவன் சமூகத்தில் கடைசி நிலைக்குத் தள்ளபடுவதை அறியாமல் இருக்கிறான்.

புதிய குளிர்பான அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை,தான் குடித்து வைத்த பாதி குளிர்பான பாட்டிலுக்கும்,அதன் அடைப்பானிற்கும் ரசிகர்களிடையே நடந்த போட்டியைப் பார்த்து,தன் வீட்டில் தான் உபயோகித்த பழையப் பொருட்களை ஏலம் விடப்போவதாக சொன்னார்.நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்த நடிகையின் பங்கு நம்மை பிரம்மிப்படைய வைக்கிறது.

சமூக நிகழ்வுகளின் கண்ணாடியாகவும்,மக்களின் விழிப்புணர்ச்சிகாகவும், செயல் படவேண்டிய பத்திரிக்கைத்துறை, வியாபாரநோக்கத்திற்காக சினிமாவை ஒரு கருவியாக்கி மக்களை சிரிய வட்டத்தினுள் அடைத்துள்ளது. நடிகர்/நடிகைகளின் திருமணம் என்றால் ஒரு முழுப்பக்க செய்தி,அடுத்து அவர்கள் தேனிலவுக்கு எங்கு செல்வார்கள் என்று புதிர்ப்போட்டி,அவர்களே கருத்தரித்தால் அதற்கும் ஒரு போட்டி,அவர்கள் விவாகரத்தும் செய்தி, இந்த அளவிற்கு இன்றைய பத்திரிக்கைகள் செயல்படுகிறது.சமீபத்தில் நடந்த உலக அழகியின் திருமணச்செய்தியை சிங்கை பத்திரிக்கை ஒன்று, ஒரு வாரம் தொடர்ந்து ஒருப்பக்க செய்தியாக வெளியிட்டது.நடிகையின் நிச்சயம்,திருமணம்,தேனிலவு,அவர்கள் திருப்பதி சென்றது, அங்கு லட்டு வாங்கியதும் ஒரு செய்தி.. நமது கவிஞர்களின் கவிதைத் தொகுப்பிற்கும், எழுத்தாளர்களின் எழுச்சிமிகும் சிறுகதைகளுக்கும் ஒதுக்கப்படுவது வாரம் ஒருப்பக்கம் ஆனால் நடிகைகளுக்கு வாரம் முழுவதும் ஒவ்வொருப்பக்கம். நடிகர்/நடிகைகளின் ஒரு இயல்பான வாழ்க்கை நிகழ்வும் இங்கு செய்தியாக்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியிலும் இதே அவலநிலைதான்,சுதந்திர தின நாள் அன்று கவர்ச்சி நடிகையின் போட்டி,தமிழர் திருநாளில் ஆங்கில மொழிப்பெயர்ப்புடன் தமிழ்தெரியாத தமிழ் நடிகையுடன் உறையாடல் நிகழ்ச்சி. என அனைத்திலும் சினிமாத்தனம்.

அவர்களிடம் கேட்டால் மக்களுக்காக என்கிறார்கள், மக்களோ அவர்கள் திணிப்பதால் தான்ப் பார்க்கிறோம் என்கிறார்கள்.ஆக சமூகம் சீரழிவை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.இப்பயணத்தை நிறுத்த நடிகைகளுக்காக ஒதுக்கப்படும் பக்கங்கள் சமூக விழிப்புணர்ச்சிக்காக ஒதுக்கப் படவேண்டும்.அப்படியும் சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பக்கங்களும்,நிகழ்ச்சிகளும் மக்களால் ஒடுக்கபடவேண்டும்.

இந்த சீரழிவை நோக்கிய பயணத்தைத் தடுக்க, நானும் பயணிக்கிறேன். தற்பொழுதையப் பயணம் தனிமையில் ஆனாலும் ஒரு ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறது எனும் நம்பிக்கையில்…

இதமுடன்,

இரா.பிரவீன் குமார்


praver5@gmail.com

Series Navigation

இரா.பிரவீன் குமார்

இரா.பிரவீன் குமார்