பொதுவுடைமை
பொதுவாக ஒரு கட்டுரையின் சாராம்சம் அதன் தலைப்பில் விளங்கும், செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திக் கட்டுரைகளுக்கும் இது பொருந்தும். அதற்கு நேர்மாறாக, கடந்த வாரம் சிங்கை தமிழ்ப் பத்திரிக்கையில் வெளிவந்த அந்த தலைப்பினால் நெஞ்சங்கள் பல நெருடலுக்குள்ளானது .
பெருமைக்குரிய, இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் ஒரு சிறந்த அமைப்பான சத்பாவனாவை ( Operation SADBAVANA ) பற்றிய செய்தியின் தலைப்பே அத்தகைய நெருடலுக்கு வித்திட்டது. ‘வேலையில்லாதோருக்கு மாடு மேய்க்கப் பயிற்சி ‘ என்பதே அதன் தலைப்பாக வெளிவந்தது .
சத்பாவனா என்பது இந்திய ராணுவத்தால் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு. வேலையில்லாப் பிரச்சினையால் இளையர்கள் வழிமாறி, தீவிரவாதத்தில் ஈடுபடாமல் இருக்க தொடங்கப்பட்ட அமைப்பே இந்த சத்பாவனா . இவ்வமைப்பு பல சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது . 2006ல் காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் இளையர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தில்( IT )பயிற்சி அளித்து துறை சார்ந்த வேலையையும் வாங்கிக்கொடுத்தது . கிராமப்புரங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தல் போன்ற செயல்களையும் இவ்வமைப்பு தொடர்ந்து செய்துவருகிறது.
அத்தகைய வரிசையில் கடந்த வாரம், ஜம்மு – காஷ்மீரின் ரியாசி எனும் இடத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், கால்நடைத் துறையைச் சார்ந்த வல்லுனர்களால், 30 வேலையில்லாத இளையர்களுக்கு பால்பண்ணை வைப்பதற்கான பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியின் முடிவில் மாநில கால்நடைத்துறையினரால், பயிற்சி பட்டரையில் பயின்றவர் களுக்கு சான்றிதழும் , வங்கியில் சுயதொழில் அடிப்படையில், குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவியும் வழங்க ஏற்பாடு செய்கிறது. இத்தகைய பணிகளின் மூலம் தீவிரவாதத்தில் ஈடுபடுத்தப்படும் இளையர்களைத் தடுக்கலாம் என்றார் இதை தொடங்கிவைத்த திரு .பிராகடியார் குளீரா எனும் உயர் ராணுவ அதிகாரி .
இத்தகைய உன்னதச் செயலைச் செய்துகொண்டிருக்கும் அந்த அமைப்பைப் பற்றிய தலைப்பே உணர்வுள்ள நெஞ்சங்களை நெருடலாக்கியது . உண்மையில் மாடு மேய்க்கவும் ஒரு பயிற்சி வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து . உள்ளே உரைக்கப்பட்டச் செய்திகள் சரியாக இருப்பினும் அதன் தலைப்பு எள்ளி நகையாடுவது போல உள்ளது. இதுபோன்ற சிறந்த அமைப்பை பாராட்டாவிடினும் , இகழாமல் இருப்பதே சாலச் சிறந்தது. யாஹூ(Yahoo)போன்ற இணைய இதள்களில் சிறப்பான தலைப்பில் இதேச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அதன் இணையமுகவரி
http://in.news.yahoo.com/071017/20/6m1k3.html
இளையர்கள் வழிமாறிப்போகாமால் தடுக்கும் இத்தகைய அமைப்பை நடத்தும் இந்திய ராணுவத்திற்கு , இத்தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றியையும் ,அதை எள்ளி நகையாடியவர்களுக்கு கடும் கண்டனத்தையும் நெருடிய நெஞ்சங்கள் சார்பாகத் தெரிவித்து கொள்வது.
நெருடலுடன்,
பொதுவுடைமை (podhuvudamai@yahoo.co.in
- விளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை ?
- கடிதம்
- தன் வினை
- படித்ததும் புரிந்ததும்..(7) குலுக்கல் முறையில் அமைச்சர் – சொல்லி மறந்த கதை;
- எனது துயரங்களை எழுதவிடு…!
- பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?
- 1981-இல் தொடங்கிய ‘சுட்டி’: பெயருக்கேற்ற சிற்றிதழ்
- இளைஞர்களை சுட்டெரிக்கும் வெள்ளித் தீ ரை!!
- இருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 16,17)
- புறநானூறும் தமிழர் வரலாறும்
- சர்வைவல் ஆப் பிட்நெஸ்!
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)
- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி.
- INTERNET BROADCASTING SCHEDULE – National Folklore Support Centre
- கடிதம்
- பம்பாய்த் தமிழ்ச் சங்கம் எஸ் ஷங்கரநாராயணனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
- துவாரகை தலைவனின் “பீங்கானிழையருவி’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2 பாகம் 2
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்
- உனக்கும் எனக்குமான உரையாடல்
- தவறாமல் வருபவர்
- கால நதிக்கரையில்……(நாவல்)-29
- யாரோ அவர் யாரோ எங்கே போகிறாரோ?
- அலென் ராமசாமி உட்காரும் நாற்காலி
- தனிமையில் ஒரு பறவை
- சிவ சேனை பற்றிச் சில நினைவுகள்
- அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து
- கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும்
- கவிஞர் ரசூல் எழுத்தும் ஊர்விலக்கமும்
- காலத்தின் தழும்புகள்
- காதல் நாற்பது (44) உன் ஆத்மவேர் என்னுள்ளே !
- தேரோட்டி இல்லாது !
- கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்
- எல்லைகளற்று எரியும் உலகு!
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 33