This entry is in the series 20101024_Issue

செந்தில்


— செந்தில்

வினையிலி – இப்படி ஒரு சொல் சங்கதமிழில்!
இல்லாத ஒன்றை குறிக்க!
அது எது? எது அது?
சொல்லிலி செயலிலி
குறைவிலி மிகையிலி
நிழலிலி கதிரிலி
ஒளியிலி ஒலியிலி
நினைவிலி மதியிலி
நிலையிலி நிற்றிலி
பகலிலி இரவிலி
முதலிலி முடிவிலி!
அது எது? எது அது?
எதுவோ ஒன்று – இல்லை-
இல்லாத ஒன்று!

Series Navigation