விந்தையென்ன கூறாயோ ?

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

சத்தி சக்திதாசன்


புவியினிலோர் மானிடவாழ்வு அடைந்ததும்
புரியாத மந்தையுள் கலந்ததும் – நானின்று
தேவைகளைத் தேடி ஒடுவதும் ; நாளும்
தாளாமல் வேதனையில் மூழ்குவதும் – என்னவொரு
விந்தையென்று கூறாயோ ?

கவியிலோர் காதல் கொண்டதுவும்
கருத்துக்கோவை மனதில் அலையாடியதும் – நானின்று
நிறுத்தமுடியாத தாகம் நெஞ்சில் கொண்டதும்
நிழலாக தமிழென் நெஞ்சில் ஆடியதும் – என்னவொரு
விந்தையென கூறாயோ ?

செவியிலோர் தேன்மொழியாய் தமிழ் இனிப்பதுவும்
சேராத சந்தங்கள் சேர்ந்திங்கு கூடியதுவும் – நானின்று
தீராத சோகங்களைச் சொல்லித் தீர்ப்பதுவும்
சிந்தனைப்பூக்கள் சிதறித் தாளினில் வீழ்வதுவும் – என்னவொரு
விந்தையென்று கூறாயோ ?

ஏவியோர் கருத்தைக் கூறியதுவும் நாமெல்லாம்
எண்ணங்களை இங்கே கலப்பதுவும் – நானின்று
தோழர்கள் மத்தியில் கவியொன்று பாடுவதும்
தோற்காத ஞானங்கள் கற்பதுவும் – என்னவொரு
விந்தையென்று கூறாயோ ?

—-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்