விட்டுசெல்….

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

பாஷா


நீ
மீண்டும் மீண்டும்
புறம் தள்ளியபோதும்
பள்ளம் நோக்கி
பாயும் நதியாய்
உன்னிடத்தில் வாசம் செய்யமட்டுமே
என் அன்பு வருகிறது!

நீ
துயருற்றதருணங்களில் பல்கிபெருகி
திசையாவும் கரம்நீட்டி
தூக்கிசெல்கிறது என்னை உன்னில்!

உறக்கம்கலையும் காலையில்
இரக்கமின்றி என்னை
உன் நினைவு சிறையில் தள்ளும் என் அன்பு
நோயில் நீ துடிக்க
இயலாமையின் வெளிப்பாடாய்
கண்ணீர் மறைத்து
கடவுளிடம் கையேந்தி நிற்கிறது!

என்
அலைவரிசையிலமைந்தவர்களென நீ சொல்லும்
குரங்கு கூட்டத்திடையே
கோழி குட்டியாய் என் அன்பு
உன்னில் தனித்திருப்பதில்
உடன்பாடு எனக்கில்லை!

அடம்பிடிக்கும் என் அன்பை
விட்டு எனைச்செல்லுமுன் என் இதயத்தில்
வெட்டிவைத்திருக்கும் சவக்குழியில்
விட்டுச்செல்!
—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation