வலுவிழந்த எந்திரங்கள்..

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

மலிக்கா


ஆளவரமில்லா அடிமரத்தில்
அமர்ந்தபடி

ஆண்ட நினைவுகளை

அடிபிரளாமல்

அசைபோடக் கற்றுக்கொடுத்த

சந்ததிகளை நினைத்துக்கொண்டு

சிதைந்துபோன நாட்களை

சிலிர்ப்போடு

சீண்டிப்பார்க்கும் உள்ளங்கள்

ஆலமர விழுதைப் பார்த்து

அதிசயிக்க முடியவில்லை

அதேபோல் தானிருந்தும்

அதிலிருந்து உதிரும்

இலைகளைபோல்

இன்றைய நிலையானதே யென

இடித்துரைத்த மனச் சோகங்கள்

எண்ணிலடங்கா துன்பச் சுமைகளின்

எல்லைகளைக் கடந்து

இயன்றைவரை

இயந்திரங்கள் போலிருந்து

இளைத்து உழைத்தவர்களையின்று

ஏறெடுத்து பார்ப்பதற்கோ

ஏதென்று கேட்பதற்கோ

இருந்தும் ஆளில்லாத

இன்னல்கள் கொல்லும் ஏக்கங்கள்

ஆட்டம் முடிந்ததும்

கூட்டம் கலைந்ததால்

அதிரும் மனதுக்குள்

ஆயிரம் வருத்தங்கள்

அடுத்தடுத்து சிந்தனைகளென

ஆட்க்கொள்ளும் மனக்கவலைகள்

சுறுங்கிய தோல்களும்

சுறுக்கமில்லா நினைவுகளும்

சுமைகளாய் கூடிநின்று

வெளிறிக் கிடந்த

வெற்றுப் பார்வையில்

வெளிச்சமிடும் வேதனைகள்

தழைக்க வைக்கும் வாழைமரம்

தன்னுயிரை தந்துவிட்டு

தானறுந்து கிடப்பதுபோல்

தன்னந் தனிமையின் தாக்கங்களால்

தனலில் வேகும் தவிப்புகள்

பச்சை புல்வெளிக்கெல்லாம்

பனித்துளிகளின் பிரவேசங்கள்

பாவம் இவர்களுக்கோ

பாடுபடுத்தும் முதுமையின்

ஆசுவாசுவாசங்கள்

வசந்தம் தொலைந்து வலுவுமிழந்து

வயது கடந்து வழுக்கை வந்து

வாழ்க்கையை கழி[ளி]த்து

வாஞ்சை தேடும் மனங்கள்-இனி

வரபோவதையும் வரவேற்க

விதிவிட்ட வழியென

விரக்தியோடு காத்திருக்கும்

வலுவிழந்த எந்திரங்கள்..

அன்புடன் மலிக்கா

http://niroodai.blogspot.com/

Series Navigation