வரைமுறைப் படிமங்கள்

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

சாமிசுரேஸ்ஓர் இலையுதிர்காலத்தின் பகல்பொழுது

வீதியோரங்களில் பழுப்புஇலைகளில்
பனித்துளிகள் படுத்துக்கிடக்கின்றன

யாருமற்ற நிரந்தர அமைதியில்
கிடக்கிறது தெரு

கதிர்கள் மங்கி கனவுகள் கரந்த நிலையில்
தெருக்களில் வடிந்துகொண்டிருக்கிறது காலம்

முரண்பாடுகளின் முதுகில் நிர்ணயிக்கப்பட்ட
விசித்தரங்களாய் முடிவில்லா ஓவியங்கள்
ஆங்காங்கே நெருப்புக்கற்களின்N;மல் விதைக்கப்பட்டிருக்கின்றன

ஒரு அநாமதேய வெளியில் நடக்கிறேன்
இருள் எனைச்சுற்றியே தொடர்கிறது

அந்த ஈரலிப்பான மணல்ப்பூக்களின்மேல்
அழுகைச்சிரிப்புடன் புதைந்துகிடக்கின்றன
மனித நிழல்கள்

நிழல்களில் என் முகம்தேடி அலைகிறேன்
எல்லாம் பொருத்தமாகின்றன
எனைப் பிரித்தெடுத்துச் சிதைக்கிறேன்
நிரந்தரமில்லா வடிவங்களாய் சிதறுகின்றன
Br>
மனித வலுக்களின் எல்லைகளின்மீதுதான்
விபரீதங்கள் நிகழ்கிறதோ

யாரை நோகச்சொல்கிறது காலம்

ஆயுள் பலமுறை கடித்துக்குதறப்படுவதால்
மலர்களில் மிருகங்கள் பூக்கத்தொடங்குகின்றன

என் கால்கள் மட்டுமே அசைகின்றன

முன்னேறமுயலும் வழிப்போக்கரோடு
விருப்பமில்லாத விசைகளை உந்தித் தள்ளி
நானும் கலவிகொள்கிறேன்
என் சித்தங்கலங்குகிறது
தவறித் தொலைதூரம் அலைவது யார்

எனதருகில்
ஒரு பனித்துளி உடைந்து மறைந்துபோகிறது


sasa59@bluewin.ch

Series Navigation

சாமிசுரேஸ்

சாமிசுரேஸ்