யாசகம்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

ப.மதியழகன்


என் அன்பிற்கினிய இறைப்பெருங்கடலே
பொழுகள் ஓடுகிறது வேகமாக
மாற்றங்கள் நிகழ்கிறது விரைவாக
நான் விடமாட்டேன் உனது பாதக்கமலங்களை
எனக்கு வாழ்க்கை புரிபடவில்லை
பொய்யெனும் சிலந்தி வலையில் சிக்கி
இரையாக என் மனம் ஒப்பவில்லை
எண்ணற்ற அமானுஷ்யங்களால்
நிறைந்துள்ளது இப்பூவுலகு
இதில் உன்னைத் தேடுவோரின்
எண்ணிக்கையோ மிகக் குறைவு
சூழ்நிலை என்னை கைதியாக்கி
சித்திரவதை செய்கிறது
சுதந்திரமற்ற சூழ்நிலைக்கு
என்னை ஏன் இரையாக்கினாய்
புவியெனும் சிறைச்சாலையில்
வசிக்கும்படி ஏன் எனக்கு சாபமிட்டாய்
ஏன் எப்போதும் நான் தேடப்படும்
பொருளாகவே என்றும் இருக்கிறாய்
விடைதெரியா புதிராக இருந்துகொண்டு
இப்புவியை ஆட்சி செய்கிறாய்
நான் கேட்பதெல்லாம்
உனது இதயத்தில் ஓரிடம்
அதோடு உன்னை என்றும் மறவாத
உன்னதமான ஜீவிதம்
வரமருள யாசிக்கிறேன்
வருவாய் என் இதய நாயகனே…

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்