முரண்பாடு

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

ஷம்மி முத்துவேல்


சிலேடைக் கவிதை
ஒவ்வொன்றும்
தப்பிப் பிறந்த தளிர்கள் …
உயிருக்கும் மெய்க்கும்
இடைப்பட்டு பிரசவித்த
வலி நிராகரித்த வார்த்தைக் கோலங்கள் ..
இருள் சூழ்ந்து அடர்ந்த
நினைவுப் பிரள்களுக்குள்
சுற்றி அலையும் மின்மினிபூச்சிகள் ..
இட்டு நிரப்பிட்ட இடைவெளிகளில்
சுயம் தொலைத்த சமன்பாடுகள்
இவைகளுள் உயிர்ப்பித்தது
இருத்தல் தொலைத்த வார்த்தை படிமங்கள் …

-ஷம்மி முத்துவேல்

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்