முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

முனைவர் தி.நெடுஞ்செழியன்


மின்தமிழ் அன்பர்களுக்கு வணக்கம்.

புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத் துறைப் புலத்தலைவர் முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராக பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய இயக்குநரான கரு.அழ.குணசேகரன் அவர்கள் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முதுகலைப் பட்டம் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற கலை இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1985ஆம் ஆண்டு மலையின மக்கள் ஆய்வு மையத்தில் விரிவுரையளாராக பணியில் இணைந்தார். பின்னர் நாடகத் துறையில் பணியாற்றினார். 1989ஆம் ஆண்டு புதுச்சேரிப் பல்கலைக்கழத்தின் நாடகத் துறை ஆசிரியராகச் சேர்ந்தார். சங்கரதாஸ்சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியின் இயக்குநராகவும், புலத் தலைவராகவும் பணியாற்றினார்.
தமிழ் இலக்கியம், நாட்டுப்புறக் கலை, தலித்தியம், நாடகவியல் துறைகளில் 27 நூல்களை எழுதியிருக்கிறார். புதுச்சேரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் இந்த இயக்குநர் பொறுப்பில் 3 ஆண்டுகளுக்கு நீடிப்பார்.
தமிழ்த்திணை சார்பில் வாழ்த்து தெரிவித்தபோது, எதிர்வரும் ஆகஸ்ட்டு 20ஆம் நாள் பொறுப்பேற்பதாக தகவல் தெரிவித்தார்.
தமிழ்த்திணை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்கும் அறிஞர் கரு.அழ.குணசேகரனை வாழ்த்தி மகிழ்கின்றது.

இலண்டன் பிபிசி தமிழோசைக்கு முனைவர் கரு.அழ.குணசேகரன் அளித்த செவ்வியை கீழ்காணும் தொடர்பில் கேட்டு மகிழலாம்.

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2007/09/070911_drkag.shtml

தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்
ஆசிரியர், தமிழ்த்திணை (www.tamilthinai.com

Series Navigation

முனைவர் தி.நெடுஞ்செழியன்

முனைவர் தி.நெடுஞ்செழியன்