மீண்டுமொரு மழைக்காலம்

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

எல் கார்த்திக்மீண்டுமொரு
மழைக்காலம் – பிற்பகல் வானம்
மாலையை போல
இருள என் மனம்
ஓடியது பின்னால்!!!

பெய்த மழையின்
மிச்சங்களாய் சொட்டிக்
கொண்டிருந்தன
மழைத் துளிகள் !!!

வசந்தக்காலத் தென்றலாய்
மனதை வருடி
செல்பவள் அன்றோ
மரத்தை வீழ்த்தும்
புயலை துவக்கி
சென்றாள்!!!

வார்த்தைகள்
செவியில் விழ மனதோ
அன்றைய வானமாய்
இருண்டது !!!

தாயை கண்ட
சேயாய் கூத்தாடும்
மனது – வெறுக்கத்
துவங்கியது மழையை !!!

மீண்டுமொரு
மழைக்காலம்!!!

Series Navigation

எல் கார்த்திக்

எல் கார்த்திக்