மறந்துபோகும் பிறந்த நாள்கள்

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

கே ஆர் மணிவாழ்த்து அட்டைகள் அனுப்பியிருக்கலாம்.
மின்னஞ்சலில் ஹாலோ சொல்லியிருக்கலாம்.
அலைபேசியில் குறுஞ்செய்தி தட்டியிருக்கலாம்.
கணிப்பொறியில் உனது நாளை வட்டமிட்டு
வைத்து ஞாபகப்படுத்த கட்டளையிட்டிருக்கலாம்.
யாரையாவது நினைவுதூண்ட சொல்லியிருக்கலாம்.
வருடத்தின் முதலிலே நாட்குறிப்பில் வட்டமிட்டிருக்கலாம்.
பரிசுக்கடைகளுக்கு முதலிலே பணம் கொடுத்து
மறக்காமல் ஏதாவது பரிசை அனுப்ப
பணித்திருக்கலாம்.

இத்தனை ‘கலாம்’
இத்தனை காலமும் இயல்பாகவே
இல்லாமல் போகிறதென்பதற்கு
என்றாவது ஒருநாள் காரணம் தெரியலாம்,
இந்த உள்ளக கேள்வியும் மறந்துபோய் சொல்லும் சாரியும்
மரத்துப்போகும்முன்.

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி