மகுடம் சரிந்தது

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

ராமலக்ஷ்மி


மங்கையர் குலத்தின்
மகாராணியாக
தனக்குத் தானே
மகுடம் சூட்டியிருந்தாள்.

மாப்பிள்ளை வீட்டு
மகா ஜனங்கள்-திரு
மண வீட்டில்
கை நனைக்க
வெள்ளிச் செம்பு
கேட்ட போதுதான்-

அரசிக்கு அவரது
பொக்கிஷ அறையின்
பொருளாதாரம்
மட்டுமின்றி
தாரமாக்கிட பொருள்
எதிர் நோக்கும்
புதிரான உலகும்
புரிய வந்தது.

*****
(மகுடங்கள் சரியக் காரணமாபவரின் கவனத்துக்கு சமீபத்திய தமிழகச் செய்தி:
மணமகள் கொடுத்த புகாரின் பெயரில், திருமண வீட்டில் வெள்ளிச் செம்பு
கேட்டு தகராறு செய்த மாப்பிள்ளை வீட்டார் கைது.)
*****

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி