பேதமை
பவளமணி பிரகாசம்

வெள்ளிப் படகிலேறி
கருங்கடலில் வலை வீசினேன்
துள்ளின வைர மீன்கள்
மணக்க மணக்க குழம்பு வைத்து
ருசிக்க ருசிக்க உண்டிட
ஏனோ மனம் வரவில்லை
மடியில் வைத்து ரசித்தேன்
துடித்து முடிந்தது
ஈரம் காய்ந்தது
கருவாடாக காத்திருந்தேன்
கிட்டவில்லை அதுவும்
வைரத் தூளெல்லாம் அந்தோ
வெறும் சாம்பலானதே
வெந்து மடிந்ததே
மாயமென்ன அறிகிலேன்
பேதமை என்பதோ
பெருந்தவறென்பதோ
வேதனை என்பதே
தேடிக் கொண்ட வினையோ
Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com