புதிர்
பி.பகவதிசெல்வம்

மரணம் நோக்கி
நகர்கின்ற வாழ்க்கை
புரிந்தவர்களுக்கே
சில நேரம்
புதிராகிவிடுகிறது…!
அது எப்படி
புரியாத சிலருக்கு
மிக எளிதாக
வசமகிவிடுகிறது …!
இங்கே
புரிதல் என்பது
என்ன என்பதே
சில புத்திசாலிகளுக்கு
புதிராகி விட்டதோ…!
– பி.பகவதிசெல்வம்