பாதியில் ஒரு கவிதை

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

வேதா


‘ஏன் பொறந்தா ? ‘
வளர்த்தெடுக்க மலைத்துநின்ற தந்தை!

‘ஏன் வளர்ந்தா ? ‘
சீர் செய்ய சங்கடமாய் மாமன்!

‘ ‘ஏன் இருக்கா ? ‘
இழந்துவிட்ட பொட்டின் ஒரே காரணமாய்,
ஈட்டியாய் வார்த்தை தகரத்தில் தாய்!

‘ஏன் படிச்சா ? ‘
திருமணச் செலவின் கவலையில் தமையன்!

‘நடத்தை சரியில்லயோ ? ‘
ஒட்டுமொத்த சந்தேகத்தில்
ஜாதகம் பார்க்கும் சுற்றம்!

…………….
…………….
…………….

உன் கண்ணில்
‘ஏன் விழுந்தேன் ? ‘
எதுவுமே செய்ய இயலாத ஏக்கத்தில்,
எதிர்பார்த்துக் காத்திருக்கும் பரிதாபமாய்
பாதியில் ஒரு கவிதை!

முடித்திருப்பேன், பாதியிலேயே….
ஒருவேளை,
‘எப்படி இருக்க… ? ‘
ஏதோவொரு சுற்றில்
என்னைப் பார்த்துக் கேட்பாயோ ?

இன்னும் நம்பிக்கையோடு
நடைப்பிணமாய் நான்!

piraati@hotmail.com

Series Navigation