பரம்பொருள்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

செங்காளி


நல்லதே செய்திடுவீர்..

செய்வதை யாரும் பார்க்கவில்லை என்றெண்ணி
செய்யக் கூடாதொன்றைச் செய்திடல் தகுமோ
என்னசெய் திடினும்நாம் எங்குமதைச் செய்திடினும்
நன்றாகப் பார்த்திடும் நாயகன் உள்ளானே !

தூய்மையான மனம்..

விளக்கு எரிகின்ற வீட்டைக் கண்டிட்டால்
களவாட வரமாட்டான் கள்ளன் என்பதைப்போல்
தூய்மையான மனமென்று தெரிந்திட்டால் நெருங்காதே
பேய்க்குணங்கள் என்பதைத்தான் புரிந்து நடப்போமே !

—-
natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி