பதவி! பதவி!

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

கரு.திருவரசு, மலேசியா.


மதுவொரு போதை! மாதொரு போதை!
பதவி என்பதோ இறங்காப் போதை!

குடிப்பவன் மதுவைக் குடித்தால் போதை!
தடிப்பயல் பதவியைப் பார்த்ததும் போதை!

பெண்ணவள் வந்து அணைத்தால் போதை!
அண்ணே! பதவியை நினைத்ததும் போதை!

மதுவின் மயக்கம் தெளிந்ததும் வெறுப்பு!
பதவி மயக்கமோ அணையா நெருப்பு!

மங்கையைத் தொடுவது முடிந்தால் சலிப்பு!
எங்கே சலிக்குது பதவியின் அணைப்பு!

பதவியே போதை! பதவியே போதை!
பதவியைப் பிடிக்க எதய்யா பாதை ?

Series Navigation