பாரதி மகேந்திரன்
பட்டர் பிஸ்கட்
தேவை
மைதா மாவு – 1 / 2 கிலோ
சர்க்கரை – 1 / 2 கிலோ
வெண்ணெய் – 150 கிராம்
சுத்தம் செய்யப்பட்ட கடலை எண்ணெய் / சூரியகாந்தி எண்ணெய் 450 கிராம்
நெய் – 200 கிராம்
சமையல் சோடா – 1 சிட்டிகை
சன்னமான ஏலக்காய்ப் பொடி – 1 மே. க.
முதலில், மைதா மாவு, 2 மேசைக் கரண்டி சர்க்கரை, வெண்ணெய், ஏலப்பொடி, சமையல் சோடா ஆகியவற்றை ஒன்றாய்க் கலந்து நன்றாகப் பிசைந்து கொள்ளபும்.
சர்க்கரையை ஒரு வாணலியில் 150 / 200 கிராம் தண்ணீருடன் கொட்டிக் கலந்து அடுப்பில் ஏற்றிப் பாகாய்க் காய்ச்சவும். கம்பிப் பாகு எனப்படும் பக்குவத்தில் சர்க்கரைப் பாகு இருக்க வேண்டும். சர்க்கரை கொதிக்கத் தொடங்கி இறுகும். சிறிதே நேரத்தில் பாகாக மாறத் தொடங்கும். கொதிக்கும் இந்தக் கூழை ஒரு சிறு கரண்டியால் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, சூடு சற்றே ஆறியதும் ஆள்காட்டி விரலால் எடுத்துக் கட்டைவிரலுடன் சேர்த்து வைத்துக்கொண்டு ஆள்காட்டி விரலை மேலே உயர்த்தினால்கம்பி போல் அந்தப் பாகு இழுபடும். அந்தப் பக்குவம் வந்தபின் இறக்கி வைக்கவும்.
ஏற்கெனவே பிசைந்துவைத்துள்ள மாவை மேலும் நன்றாய்ப் பிசைந்து திரட்டி ஒரு பெரிய உருண்டையாய்ச் செய்து கொள்ளவும். ஓர் அகலமான அப்பளப் பலகையில் நெய்யைத் தடவிய பின், இவ்வாறு பிசைந்த மாவை அதில் வைத்துச் சப்பாத்திக் குழவியால் அரை அங்குஅங்குலக் கனத்துக்கு அதை நசுக்கிச் சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும்.
இந்தச் சப்பத்தியை உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் கத்தியால் துண்டுபோடவும். வட்டமாகவோ அல்லது சதுரமாகவோ அல்லது நீள் சதுரமாகவோ அவை இருக்கலாம். வட்ட வடிவத்துக்குச் சிறிய கண்ணாடிக் குப்பிகளின் மூடியைப் பயன் படுத்தலாம். சதுரம். நீண்ட சதுரம் ஆகியவற்றுக்குக் கத்தியைப் பயன் படுத்தலாம். ஓரங்களில் வீணாகும் மாவை ஒன்று திரட்டி அப்பளம் இட்டு மீண்டும் துண்டுபோடலாம்.
இந்த பிஸ்கட்டுகளைத் தோசைத் திருப்பியால் நெம்பி எடுத்து, நெய் தவிய தட்டு ஒன்றில் பரப்பி வைக்கவும். பின்னர், அடுப்பில் கடாயை ஏற்றி, எண்ணெய்யை முதலில் ஊற்றிக் காய வைக்கவும். அது காய்ந்த பின் நெய்யை அத்துடன் சேர்க்கவும். நெய் மிகவும் காய்ந்து விடக் கூடாது என்பதாலேயே அதைப் பின்னர் ஊற்றச் சொன்னோம். நெய் உருகிக் கலந்த பின், பிஸ்கட்டுகளை அவை மூழ்கும் அளவுக்கு எடுத்துப் போட்டு அவ்வப்போது திருப்பி விட்டுக்கொண்டிருக்கவும். பிஸ்கட்டுகள் பொன்னிறத்துக்கு வந்த பின் ஒரு கண்ணகப்பையால் (ஜாரணிக் கரண்டி) அவற்றை வடித்து எடுத்து, தயாராக உள்ள சர்க்கரைப் பாகில் தோய்த்து எடுத்து ஒன்றோடொன்று ஒட்டாமல் பரப்பி வைக்கவும். சர்க்கரைப் பாகு நீர்த்துப் போகாமல் சரியான கம்பிப் பாகுப் பதத்தில் இறுகி இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சரியான பக்குவத்தில் பாகு இருப்பின், பிஸ்கட்டுகள் வாயில் போட்டதும் கரையும். ஒன்றோடொன்று ஒட்டாது. எண்ணெய்-நெய்க் கலவை மிதமான சூட்டில் காய வேண்டும் என்பதால் அடுப்பைப் பந்தம் போல் எரியவிடக் கூடாது.
குண்டாக இருப்பவர்கள் தவிர்க்கவும்! சதை போட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அடிக்கடி செய்து சாப்பிடவும்.
mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 10 அத்தியாயம் பதின்மூன்று
- பிரதாப சந்திர விலாசம் (தமிழின் முதல் இசை நாடகம்), புத்தக மதிப்புரை
- காதல் நாற்பது -42 என் எதிர்காலத்தை எழுது !
- ஈகைத் திருநாள்!
- Letter
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள் – கோட்டை பிரபுவின் கட்டுரை
- நவகாளியில் காந்திஜி
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் 17.
- பட்டர் பிஸ்கட்
- கொழும்பு புத்தகக் கண்காட்சி – ஒரு விசிட் !
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- சிங்கை வீதிகளில் பாரதி !!!
- என் இசைப் பயணம்
- ஆயிரம் பொய்யைச்சொல்லி…….
- பெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- “தொல்காப்பியச் செல்வர் கு சுந்தர மூர்த்தி” : முனைவர் மு இளங்கோவன் கட்டுரை
- சோதிப்பிரகாசம் : திண்ணையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரை
- தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு – கருத்தரங்கம்
- தர்மசிறி பண்டாரநாயக்கவின் விவரணப் படவிழா
- பெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 31
- காதலினால் அல்ல
- மனசாட்சி
- கால நதிக்கரையில்……(நாவல்)-27
- நாய்கள் துரத்தும் போது…
- பனி விழும் இரவு
- ஹெச்.ஜி.ரசூல் படைப்புலகம்
- தொடக்க நிலையிலுள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடராமல் இருப்பதே நலம்
- படித்ததும் புரிந்ததும்..(5) பதவிப் பிரமானம் (பதவிப் பரிமானம்
- நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள்
- ஒலி இலக்கியச்செம்மல் திருவண்ணாமலை சி.மனோகரன்
- சவம் நிரம்பியபுத்தகபைகள்
- பாரத அணு மின்சக்தித் திட்டங்களும் அவற்றின் அமைப்புத் திறனும் – 6
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1 பாகம் 2
- டி.என். சேஷகோபாலன் என்ற புத்துணர்வு