பசு

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

நம்பி


அம்மா என்குது வெள்ளைப் பசு
துரத்தி நத்துது காளைக் கன்று
தோட்டத்தில் கவனித்த பார்வதிக்கா
சொர்ணத்த கூவி கேக்குறா
வழுவு அடிச்சு நாறுதடி
காலங் கடந்து போகுதடி
காளைக்கு ஓட்டிட்டு போகலயா ?
நேரங் கூடி வரலக்கா
கருத்தட செஞ்சி இருக்கனக்கா
நல்லா நடக்க வேணுமக்கா
நாலு நாளாச்சும் ஓய்வக்கா
அஞ்சாம் நாள் மறியலக்கா
செத்த பசுவ உரிச்சதுக்கு
ஆறா(ம்) நாள் போகனுங்க்கா
சீம கன்னு வேணுமக்கா
சென ஊசி ஒன்னு போடனுக்கா.

nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி