K.ரவி ஸ்ரீநிவாஸ்
கெயில் விவசாயிகளின் இயக்கங்கள் தாரளமயமாக்கல், தொழில்நுட்பம் குறித்து மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்துள்ளதை விளக்குகிறார். ஜோஷியின் தலைமையிலான விவசாயிகள் இயக்கம் கிராமங்களுக்கு முக்க்யத்த்வம் என்ற வகையில் காந்தியத்தை ஏற்கிறது, ஆனால் தொழில்நுட்பம்,நவீனத்துவம் போன்றவற்றில் அது காந்தியத்தை நிராகரிக்கிறது, நேருவிய அரசு சோசலிசத்தை எதிர்க்கிறது,இடதுசாரிகள் போல் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து சாதகமான அனுகுமுறையை கையாள்கிறது, ஆனால் அவர்கள் போல் சந்தையை எதிர்மறையாக அனுகுவதில்லை.மாறாக விவசாயி சந்தையை சரியாக கையாண்டால் பலன் பெறலாம், அரசின் கொள்கைகள் காரணமாக விவசாயின் சுதந்திரம்,உரிமைகள் பாதிக்கப்ப்டுகின்றன.அதே சமயம் இவ்வியக்கம் பெண்கள் உரிமைகள்,அவர்களின் பெயரில் நிலம் இருப்பது,வளம் குன்றா வேளாண்மை போன்றவற்றையும் விவாதித்துள்ளது, நடைமுறையிலும் செயல் படுத்த முனைந்தது.கட்சி சாரா விவசாயிகள் இயக்கங்கள் 1970 களில் பலம் பெற்றன என்றாலும் அவை ஒருங்கிணைந்து நாடு தழுவிய அளவில் ஒரு பெரிய சக்தியாக உருவாகவில்லை.சில இயக்கங்கள் பிளவு பட்டன. திக்காயத் தலைமையிலான இயக்கமும்,நஞ்சுண்டசாமி தலைமையிலான இயக்கமும் கடந்த சில ஆண்டுகளில் பெரும் பின்னடைவுகளை சந்தித்தன. நஞ்சுண்டசாமி தலைமையிலான இயக்கம் விவசாயத்தில் உயிரியல் தொழில்நுடபத்த்தை எதிர்க்கிறது, பன்னாட்டு நிறுவனங்களையும் எதிர்க்கிறது. ஆனால் பல விவாசாயிகள் பசுமைபுரட்சிக்கு அடுத்த கட்டம் உயிரியல் தொழில்நுட்பம் என்று கருதுகின்றனர்.பருத்தி போன்ற பயிர்களில் உற்பத்திச் செலவில் கணிசமான பகுதி பூச்சிகொல்லிகளுக்கு செலவிடப்படுவதை இதன் மூலம் குறைக்கலாம், விளைச்சலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கிறனர்.ஆனால் BT பருத்தி வெற்றியா தோல்வியா என்பது சர்ச்சைகுள்ளாகியுள்ளது.
மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு , சுற்றுச்சூழல்,தொழிலாளர்,பெண்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள்,கோரிக்ககைள் குறித்து செயல்படும் இயக்கங்களின் கூட்டணியாகும்.இதில் இடம் பெற்றுள்ள பல
இயக்கங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமான மூல வளங்களை காப்பதற்கான போராட்ட்ங்களில் ஈடுபட்டுள்ளன.தற்போது நீர்வளம் தனியார்மயம் என்ற பெயரில் தனிச்சொத்தாக மாற்றப்ப்டுவதை இவை எதிர்த்துவருகின்றன.சட்டிஸ்கார் மாநிலத்தில் ஒரு நதிப்பகுதி இவ்வாறு தனியார்மயமாவது கைவிடப்ப்ட்டது.ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பகுதியில் மக்கள் இயக்கங்கள் முயற்ச்சியால் நீர்வள ஆதாரங்கள் மேம்பட்டது மற்றுமின்றி பிற பகுதிகள் வறட்சியால் பாதிக்க்ப்பட்ட போது அப்பகுதியில் பாதிப்பு ஏற்படவில்லை. ரலேகான் சித்தி என்ற ஊரில் அன்னா ஹசாரே மேற்கோண்ட முயற்சிகள் மக்கள் பங்கேற்ப்பு எத்த்கைய
மாறுதலை கொண்டுவரும் என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டு.
.இது போல் பல முயற்சிகள் இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுற்கு தாங்களே முயன்று, வெற்றி கண்டதற்கு சான்றாக உள்ளன. (அமரர்) அனில் அகர்வால்,
சுனிதா நாரயண் இத்தகைய முயற்சிகள் குறித்து ஆராய்ந்து Towards Green Villages என்ற நூலில் அதிகார பரவலாக்கம்,மக்கள் வசம் தீர்மானிக்கும் உரிமைகள் ஆகியவை அவசியம் என்று வாதிட்டனர்.அரசு மூலவளங்களை நிர்வாகம் குறித்து உள்ள கொள்கைகள் மாற்றப்ப்டவேண்டும் என்று வாதிட்டனர். பல மக்கள் இயக்கங்களும் இதை ஏற்கின்றன.மகாரஷ்ராவில் பானி பஞ்சாயத்து என்ற முறைமூலம் நீர் வளத்தினை பங்கிடுதல், மக்கள் உழைப்பில் உருவான பலிராஜா அணை என்று உதாரணங்கள் உள்ளன. இது போல் காட்டுபபகுதிகளில் மக்கள் ஒத்துழைப்பபுடன் கூட்டு காட்டு நிர்வாகம் (JOINT FOREST MANAGEMENT) போன்ற முயற்சிகள் மேற்கோள்ளப்ப்ட்டன.இதன் முன்னோடி மேற்கு வங்கத்தில் 1970 களில் செய்யப்ட்ட சில முயற்சிகள்.இன்று கூட்டு காட்டு நிர்வாகம் பல பகுதிகளில் நடைமுறையில் உள்ளது, ஆனால் அனைத்துப்பகுதிகளிலும் இது வெற்றி என கருதயியலாது.
இந்தியா மற்றும் பல வளர்சசியுறும் நாடுகளில் மக்கள் இயக்கங்கள்/போராட்டங்களை எழைகளின் சூழலியம் என்று இரு ஆய்வாளர்கள் என்று அழைத்தனர்.(1). பல இயக்கங்கள் வாழ்வுரிமைககான போரட்டங்கள் என்று போராடும் போது அவை சூழல்/மூலவளங்கள் குறித்த போராட்டங்களாகவும் உள்ளன.(2). ஆனால் இயக்கங்கள்/போரட்டங்களை எப்படி புரிந்துகொள்வது, அவற்றின் கருத்தியலகளை எப்படி வகைப்படுத்தி ஆராய்வது என்று பல கேள்விகள் எழுகின்றன.இந்தியாவில் சுற்றுச்சூழல் குறித்த போராட்டங்களிடையே உள்ள கருத்தியல் வேறுபாடுகள் என்ன, இதன் நடைமுறை முக்கியத்துவம், political ecology என்றால் என்ன – இக்கேள்விகளை இனி வரும் பகுதிகளில் எதிர்கோள்வோம்.
(1)Guha, Ramachandra and Juan Martinez-Alier. 1998. Varieties of Environmentalism: Essays
North and South. Oxford University Press: Delhi.,
Guha, Ramachandra.2000. Environmentalism: A Global History Oxford University Press: Delhi.
(2) உ-ம் Richard Peet and Michael Watts (eds.).1996 Liberation Ecologies: Environment, Development, and Social Movements. Routledge,
John Friedmann,Haripriya Rangan(eds) 1993,In Defense of Livelihood: Comparative Studies in Environmental Action
Hartford, CT: Kumarian Press
Peluso, N. 1993 Coercing Conservation ? The Politics of State Resource Control, Global Environmental Change 3(2):199-217,
Bryant RL , Bailey S. 1997 Third World Political Ecology,Routledge,
Rocheleau D, Thomas-Slayter B, Wangari E (eds.) 1996 Feminist Political Ecology,Routledge,
Pramod Prajuli 1998 Beyond Capitalized Nature,Ecumene Vol 5 No 2
***
ravisrinivas@rediffmail.com
- சென்னைத்தமிழில் கணினி
- பேராசை
- அறிவியல் மேதைகள் டாரிசெல்லி (Torricelli)
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 3 லின்னஸ் பவுலிங்
- பிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி)
- சாக்கியார் முதல் சக்கரியா வரை
- ஒரு புளிய மரத்தின் கதை – ஒரு காலங்கடந்த பார்வை
- பொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- மதமும் தம்மமும் – மதம் குறித்த பெளத்த கோட்பாடு
- கவிதை பற்றி
- எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 60)
- காலச்சுவடு மலர் – ஒரு சுயமதிப்பீடு
- தூண்டில்காரர்கள்
- தின கப்ஸா – விட்டுக் கொடுத்தல் சிறப்பிதழ்
- தினகப்ஸா – குடிமகள் சிறப்பிதழ்
- ப சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசுகிறார்
- பசுமைப் பார்வைகள் :சுற்றுச்சூழல் அரசியல் – 2
- இயந்திரப் பயணங்கள்
- அன்னை
- இனியொரு வசந்தம்!!
- காலம்
- உயிரின் சொற்கள்
- அமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (Billy Collins)
- எங்கே அவள்
- கடிதங்கள்
- குழியும் பறித்ததாம்!
- எதிர்காலத்தில் ஒரு நாள்………….
- ஓ போடு……………
- அம்மாச்சி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐந்து
- 5140
- இந்த வாரம் இப்படி (விவாதம் இல்லாமல் சட்டங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு, ஈராக் போர், பாகிஸ்தான் உறவு)
- இரண்டு தலைகள் கொண்ட மனிதனுடன் ஒரு நேர்முகம்
- ஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்
- முதல் காஷ்மீர்ப் போரில் ஆங்கிலேயர் செய்த மோசடி
- பசுமையாகும் மார்க்சியமும்,புதிய பார்வைகளும்
- வரங்கள் வீணாவதில்லை…
- தாயின் தனிச்சிறப்பு
- கழுதைப் புலிகளும், நத்தைகளும், சில மனிதர்களும்
- ஏன் அமெரிக்க விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஏழை நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடியாக இருக்கிறது ?
- கவித்துளிகள்(ஹைக்கூ)
- இரண்டு கவிதைகள்
- மறுபிறவி எடுத்தால்
- சாப்பாடு
- அன்னையர் தின வாழ்த்து
- பிரியும் பாதையும் பிரியா மனமும்
- மாப்பிள்ளைத் தோழன்