நிச்சயமாய் …… நித்தியமாய் …….

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

இளந்திலையன் –


தவழ்ந்து நகர்ந்து
நரைத்துப் போனது
வாழ்க்கை

ஆர்ப்பரித்து
ஓடத்துவங்கி ஒடிந்து போனது
வாழ்க்கை பற்றிய கனவு

அலைந்து அலைந்து
அடைந்தது
அவலம் மட்டும் – ஆனால்

நிலைத்து நின்றது
நிச்சயமாய் நித்யமாய்
நீயும் நானும் கொண்ட
அன்பு மட்டும்

Series Navigation

இளந்திலையன் -

இளந்திலையன் -