நான் இறந்து போயிருந்தேன் . . .

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

மார்கண்டேயன்நிராகரிப்பின் நீட்சிகள்
நீளும் தருணங்களிலெல்லாம்
உடலெரிந்து பின்னிருக்கும்
சாம்பல் துகள்கள்
காற்றில் பறப்பதைப்போல்
நான் இறந்து போயிருந்தேன்
எறிந்த தரை இருப்பது போல
உயிர் இருந்தும் . . .

ஞானக் கணக்கை
நேர் செய்ய
பலரால் பல வழிகளில்
‘நான்’ இறந்து போயிருந்தேன் . . .
ஞானக் கண் மட்டுமேனோ
இன்னும் திறப்பதற்கு வழியேயில்லை ?!!

தாய்ப்பால் தடை செய்யப்பட்ட
காலம் தொட்டு
பால்யத்தில் கரம் பிடித்தவளின்
பிரிவு உட்கொண்டு
எத்தனையோ முறை
நான் இறந்து போயிருந்தேன் . . .

தொடர்ந்துகொண்டே இருக்கிறது
இறப்பும் பிறப்பும்
பள்ளித் தேர்வில் தவறிய போது
கல்லூரித் தகுதி அடையாதபோது
இன்னும் எத்தனையோ . . .

புதிது புதிதாய் . . .
‘நான்’ மட்டும் மாறாமல்
இருகோட்டுத் தத்துவமாய்
இன்னல்கள் தொடரும்போது
‘நான்’ இறந்து கொண்டேயிருக்கின்றேன் . . .

இத்தனை முறை
மீள்த்துயிர்ந்தாலும்
இனி மாற்ற முடியாத
இறுதிக்கோடாய்
நான் இறந்து போயிருந்தேன் . . .
இனிமேல் மீள முடியாமல்

இயல்பாய் இவனுள் சென்றவளை
இதயமறுத்து ஈருடலாய்
மெய்பித்தபோது . . .
வக்கற்றவனாய் . . .
கடைசியாய், உயிரோடு
இறுதி மூச்சு உள்ளவரை . . .
உதிரம் உளுத்துப் போகும் வரை
நான் இறந்து போயிருந்தேன் . . .

மார்கண்டேயன்

Series Navigation

மார்கண்டேயன்

மார்கண்டேயன்