நானொரு பாரதி தாசன்!

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

ராஜி


எங்கெங்கே பார்த்தாலும்
அங்கே நீ வசிக்கிறாய்
தங்கு தடையில்லாமல்
தவிப்பவரைப் பேணுகின்றாய்!
எந்த முகவரியில் உன்னை அழைப்பேனோ ?
சொந்தமாய் என்னுள் சடுதியில் வருவாயோ ?

நானொரு அறியாத வாசன்…
நானொரு பாரதி தாசன்!

சாரதை உருவத்தில் சிநேகிதமான கற்பனையோ ?
வாரணை ரூபத்தில் வேண்டியவன் இறைவனோ ?
நாரணணோ! பரமதேவனோ ? நாச்சியாரோ ? பங்கலையோ ?
மாருதி ராயனோ, மாலோன் மருகனாய் மன்மதனோ ?
ஏது உருவத்தில் யார் கண்டார் ?
வேதவல்லியாய், வேதநாயகியாய் வந்ததுண்டா ?

கவிதையும், கல்வி கொடுத்துக் கற்கச்செய்கிறாயே…
அவித்தை என்னுடைய ஆற்றுதல் நீக்கிறாயே…
வரம் கொடுத்த விற்பனன் வல்லறிவனே!
உரம் தந்த உருக்குமாய் காப்பவனே!

நன்றியைக் காட்டத் தெரியாத அரசன்,
நானொரு அறிவிலாத வாசன்…
நானொரு பாரதி தாசன்!

r2iyer@ryerson.ca

Series Navigation

ராஜி

ராஜி