நானும் நானும்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)


எல்லா இடத்திலும்
என்னையே சந்திக்கிறேன்

நான்
நான் இல்லாத இடத்திலும்
நான் இருக்கிறேன்

நான் இருக்கும் இடத்திலும்
என்னோடு இருப்பது
நான்தான்

எனக்கும் எனக்கும்தான்
எல்லாம்

எல்லா இடத்திலும்
என் எல்லாம்
நான்தான்

லாபம் லாபமாகிறது
லாபம் நட்டமாகிறது
நட்டம் நட்டமாகிறது
நட்டம் லாபமாகிறது

லாபமும் நட்டமும்தான்
நான்

லாபத்தைப் பெருக்கிக்கொள்ள
என்னையே நான்
தண்டிக்கிறேன்

என்னையே பெருக்கிக்காட்டி
நட்டத்தை வாரிக்கொள்கிறேன்

எல்லாம்
நானாக இருக்கிறேன்

நானன்றி நானில்லை
பராபரமே


pichinikkaduelango@yahoo.com

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ

நானும் நானும்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

நெப்போலியன்,சிங்கப்பூர்


நிலாக்
கனவுகளைத்
துரத்தியபடி
முடிவில்லா
பரவெளியில்
என் பயணம்…

வலைகளை
அவிழ்க்கச் சொல்லி
படபடக்கும்
மனக் கெளதாரி…

விட்டு விடு
இனி
ஒரு போதும்
நீ
உனக்கில்லை…

கிளை
பிரிந்த
இலை எழுதும்
கவிதை
உனக்கென
கர்வம்
முளைக்காதே…

நீண்ட
மென்கழுத்து
மடக்கி
நீருக்குள்
இரையாடி
முண்டமாட்டும்
முக்குளிப்பானானது
உன் தேடல்…

கை
சுட்ட பின்பும்
உதறப்படாத
சிகரெட்டாய்
நீ…

கடைசி
இழுப்புக்காய்
காத்திருக்கும்
புகை…

நிசிகளில்
குரைக்கும்
நாய்களில்
நானும் உண்டு…

எடுத்துவை
பத்திரமாய்
உன்
பேனாவை
நீ
கவிதைக்காரன்!

_______________

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்