நழுவும் …

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

அருண்பிரசாத்


கை நழுவுகின்றன
நமக்குள் நாம் ஊடுருவிய
உன்னதமான தருணங்கள்.

இறுக்கிப் பிடிக்க விழைகிறேன்
என் இரு கைகளில்.

ஒரு கொப்புளமாய் எழும்பி
சுற்றிலும் கசிகிறது
இப்பிரிவு.

அருண்பிரசாத்
everminnal@yahoo.com

Series Navigation