நமது இலக்கிய மரபு – பாிபாடலில் திருமால் –

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

வளவதுரையன்


பாிபாடலின் இரண்டாம் பாடலைப் பாடியவர் கீரந்தையார் எனும் புலவர் . உலகத்தின் தோற்றமுறைகளையும், வராக அவதாரத்தையும் சிறப்பித்துக்கூறி கொடுமையான எண்ணங்கள் இல்லாத நல்லறிவை அருளவேண்டுமெனத் திருமாலிடம் இப்பாடலில் அவர் வேண்டுகிறார்.

பரம்பொருளாகிய இறைவனிடத்திலிருந்து வானமும் அதிலிருந்து படிப்படியாக காற்று, தீ, நீர், நிலம் முதலியவை தோன்றியதாக வேதங்கள் கூறுகின்றன. மேலும் பல்வேறு ஊழிக்காலங்கள் கடந்தபின்னர் தான் நிலஊழி தோன்றுகிறது.

நிலஊழி தோன்றுவதற்கு முன் நீர் ஊழிக்காலத்தில் எங்கணும் பெருவெள்ளம் பெருக்கெடுத்துக் கிடந்தது. அவ்வெள்ளத்தினுள்ளே நில ஊழி மறைந்துகிடந்தது. அந்த நில ஊழி வெளியே வந்து அதில் உயிாினங்கள் தோன்றத் திருமாலே காரணமாக விளங்குவதைப் பாிபாடலின்

‘கேழல் திகழ்வரக் கோலமொடு பெயாிய

ஊழி ஒருவனை ‘

எனும் அடிகள் காட்டுகின்றன.

திருமாலே! உயிர்கள் உண்டாதற் பொருட்டு நீ வராக அவதாரம் எடுத்து வெள்ளத்தடியிலே கிடந்த இந்த நிலத்தினை எடுத்தாய். அச்செயலால் இது வராக கற்பமென்னும் பெயர் பெற்றது. இவற்றை அழித்தும் மீளத்தோற்றுவித்தும் வருகின்ற திருவிளையாட்டினை நீ தொடர்ந்து செய்து வருகிறாய் என்று பாிபாடல் கூறுகிறது.

இதையே கம்பர் ‘அலகிலா விளையாட்டு ‘ என்பார். இந்த விளையாட்டை ஆடிக்கொண்டிருப்பதோடு திருமாலே சித்து, அசித்து கிய இரண்டாகவும் இவ்வுலகில் திகழ்கிறார் என்று திருமங்கை ழ்வார் கூறுகிறார்.

‘திடவிசும்பு எாிநீர் திங்களும் சுடரும்

செழுநிலத்து உயிர்களும் மற்றும்

படர்பொருள் களுமாய் நின்றவன்… ‘

என்பன அவர் அருளிச் செய்த பாசுர அடிகளாகும்.

திருமாலே ஐம்பூதங்களாக விளங்குவதை நம்மாழ்வார்

‘நீராய் நிலனாய் தீயாய்

காலாய் நெடுவானாய் ‘ என்று பாடுகிறார்.

நில ஊழியை வெளிக்கொணர்ந்த ஊழிமுதல்வனின் பெருமையை மேலும் பாிபாடல் பேசுகிறது.

யார் யார் இறைவனை எப்படி எல்லாம் மனத்தில் எண்ணுகிறார்களோ அவர்கள் கருத்திற்கேற்ப எம்பெருமான் காட்சியளிப்பார்.எல்லாவற்றையும் கடந்த பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட உரு என்பது மாயத்தோற்றமே.

எனவேதான்

‘வளையோடு புரையும் வாலியோற்கவன்

இளையன் என்போர்க்கு இளைய யாதலும் ‘

என்று பாிபாடல் கூறுகிறது.

மேலும்

‘புதையருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியேற்கு

முதியை என் போர்க்கு முதுமை தோன்றலும் ‘

எனும் அடிகளிலிருந்து எம்பெருமான் பலராமன் என எண்ணுவார்க்குப் பலராமனாகவும் கண்ணன் என்பார்க்குக் கண்ணனாகவும் அவரவர் நினைப்பிற்கேற்ப அருள்செய்வார் என்பது விளங்குகிறது.

சங்கினோடு ஒப்பான வெண்மையான நிறத்தைக் கொண்ட பலராமன் என்பதை ‘வளையோடு புரையும் வாலியோன் ‘ எனும் அடிகாட்டும் போது பொியாழ்வாாின் பாசுரம் நினைவிற்கு வருகிறது. தளர் நடைப்பருவத்தில் வெள்ளிப்பெருமலைக்குட்டனான பலராமன் விரைந்தோட அவன் பின்னால் தொடர்ந்து கருமலைக் குட்டன் அடிவைத்துச் செல்வது போல் கண்ணன் வருவானோ என அவர் கேட்கிறார்.

‘பலதோன் என்னும்

தன்நம்பி யோடப் பின்கூடச் செல்வான்

தளர்நடை நடவானோ ? ‘

என்றும் அவர் அருளிச் செய்கிறார்.

வராக அவதாரத்தைச் சிறப்பிப்பது இப்பாடலுக்குள்ள தனிச்சிறப்பாகும். வானளவு ஓங்கி நின்ற வராகத்தின் கூர்மையான வெள்ளிய கொம்புகளுக்கிடையே நிலமகள் ஒரு புள்ளி போல விளங்குகிறான். வராகக்களிறாகிய திருமால் அக்காலத்தே அவளை மணந்து கொண்டார் என்றும் இப்பாடல் காட்டுகிறது.

‘பன்றியாய் மீனாகி அாியாய்ப் பாரைப்

படைத்துக் காத் துண்டுமிழ்ந்த பரமன் ‘

என்று பொிய திரு மொழி காட்டுவதையும், பொியாழ்வார்

‘பன்றியும் மையும் மீனமுமாகிய

பாற்கடல் வண்ணா ‘]

என்று அருளுவதையும் நினைக்கத் தோன்றுகிறது.

அடுத்து எதிர்த்து வரும் அவுணர்களை எம்பெருமான் வெற்றி கொண்ட விதம் கூறப்படுகிறது. பகைவாின் கொடிகள் அறுந்து விழும்படியாகவும், அவர்களின் செவிகள் செவிடாகும்படியாகவும், அவர்தம் மணிமுடிகள் வீழும்படியாகவும் திருமாலின் சங்கு முழங்கிற்று.

‘…. தீய அசுரர்

நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே ‘

என்று நாச்சியார் திருமொழியில் காண்கிறோம் .த்ிருமாலின் சக்கரப்படையானது பகைவாின் உடலிலிருந்து தலைகளை அறுத்துக் தள்ள அத்தலைகள் சிதறி விழுந்தன.பனைமரங்களின் மேலுள்ள பல பதினாயிரம் குலைகள் வீழ்வது போல் அவை வீழ்ந்ததாகப் பாிபாடல்

‘பனைமிசைப் பலபதினாயிரம் குலைதரை உதிர்வ போல் ‘

என்று உவமை கூறுகிறது. திருமங்கையாழ்வார் திருக்கண்ணங்குடியில் எழுந்தருளியுள்ள திருமாலைப்பாடும்போது

‘பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்

பருமுடி உதிரவில் வளைத்தோன் ‘

என்று அருளிச் செய்வது இங்கு நினைவு கூரத்தக்கது.

திருமாலின் ஒளி நீலமணியைப் போன்றது. எம்பெருமான் கண்கள் தாமரை மலர்கள் போன்றன. அவர் வாய்மை தவறாமல் வரும் நாளைப் போன்றது. அவர்தம் பொறுமை நிலத்தையும் எம்பிரான் அருள் மேகத்தையும் ஒத்தன. இவ்வாறு ஒட்டிமை பல கூறினாலும் ‘எவ்வயிளோயும் நீயே ‘ என்று கூறுவதால் அவர் அவற்றைக் கடந்து எல்லா இடங்களிலும் பரந்து விளங்குகிறார் என்று பாிபாடல் காட்டுகிறது.

மேலும் அந்தணர் முறையாகச் செய்கின்ற வேள்விச் சுடாில் நீ எழுந்தருளி அவர்களுக்குக் காட்சி தருகிறாய் என்று கூறப்படுவதால் சங்ககாலத்தில் வேள்விகள் நடைபெற்றதை அறிய முடிகிறது.

எம்பெருமான் சாதாரண மாந்தருக்குச் சிலைவடிவத்திலும் அந்தணருக்கு வேள்வித் தீயிலும் யோகியர்க்கு அவர் உள்ளத்திலும் சித்தர்களுக்கு எங்கும் எதனிடத்திலும் தோன்றுவான் என்று கூறுவார்கள்.

‘எம்பெருமானே! தேவர்கட்கு சாவா மருந்தாகிய அமுதத்தைத் தந்தருள வேண்டுமென நீ நினைத்தாய். உடனே அமுதம் அவர்களின் வாயினைச் சென்று அடைந்தது. அவர்களும் முதுமையற்ற வாழ்வையும் தோற்காத தொள் வலியும் பெற்றனர். அமரர் பொருட்டாக அத்தகைய நன்மை செய்து அருளிய பொியோய் ! எமக்கும் அருள் புாிவீராக.

நாங்கள் நின் திருவடிகளில் எம் தலைகளை வைத்து வணங்கினோம். நின் புகழைச் சொல்லி நின்னைப் போற்றினோம்! ஏன் தொியுமா

‘கொடும்பாடு அறியற்க எம் அறிவெனவே

என்று வேண்டுவதற்காகத்தான். ‘

என்று பாிபாடல் அடிகள் காட்டுகின்றன.

கொடும்பாடு என்பதற்கு மாறுபாடு என்று பொருள கொள்ளலாம். அறிவு என்பதே தெளிந்து இருப்பதுதான். அதில் மயக்கமோ, மாறுபாடோ தோன்றக்கூடாது. அறிவு தெளிவாக இருந்தால்தான் செய்யும் செயல் சிறந்து வாழ்வு மேம்பாடு அடையும்.எல்லாவற்றையும் அறிந்த பரம்பொருள் என் மனத்தை எக்காலத்தும் மாறுபாடு தோன்றாமல் இருக்க அருள் செய்ய வேண்டும். அதற்காக இறைவனை நம் உள்ளில் இருப்பவனாக உணர்ந்து அவன் கடரடியைத் தொடவேண்டும் என்பதே இப்பாடலின் கருத்தாகும்.

==

மருதம் இதழில் வெளியானது

Series Navigation

வளவ.துரையன்

வளவ.துரையன்