தோற்றம் எங்கே

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

செண்பக ஜெகதீசன்


எங்கிருந்து தோன்றியது
எங்கும் நிறை
ஊழலும்
உடன்பிறந்த லஞ்சமும்–
உள்ளிருந்து வெளியிலா,
வெளியிலிருந்து உள்ளேயா..
மேலிருந்து கீழேயா,
கீழிருந்து மேலேயா..
கண்டுபிடிக்க முடியாது
கடவுளாலும்..,
ஆனாலும் அது
கட்டாயத் தேவையாகிவிட்டதே !
கடவுள்தான் காட்டவேண்டும்
கரையேறும் வழியை..
சரி.. சரி,
கையிலிருக்கும் காசைப்போடு-
காணிக்கையாய் !
செண்பக ஜெகதீசன்

Series Navigation