தொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

சாமிசுரேஸ்



தொலைதூர மறுதலிப்பில்
மகிழ்வுடைவிசும்பலில்
இரவும் விடிவும் மாறி மாறி நகர
விரல்களினு}டே
விகாரப் பேதலிப்பு இறுகிக்கொண்டது

கனவாய் இருக்கக்கூடாதா
உன் மரணம்

நீண்டு நிமிர்ந்து பரந்த
உன் உடலின் மீது
மரணத்தின் இருப்பை நினைக்கமுடியவில்லை

நீ
மரணமற்றவன்

வளிமண்டலத்தில் கரைந்து
என் நெஞ்சுப்பரப்பில்
து}வப்பட்டது உனதுடல்

எனக்கு நீ
எழுத்தறிவித்தவன்

என் சிந்தனைகளின்
ஒவ்வொரு நுண்ணிய கோட்டிலும்
உன் விருப்பு நிறைந்திருக்கிறது

உயிர் மலிந்த மூச்சுக்களின் வலி
வெப்ப வீச்சுக்களை
சிரசில் சுமந்துகொண்டு
வேலிதின்ற விருட்சமாய்
சிதறுகிறது தேசம்

நீ
தேசத்தை நேசித்தவன்

என்னவொரு
மயானப்பிறப்புக்கள் நாங்கள்
அப்பா தம்பி அண்ணன்
என பட்டியல்கள் நீள
நாளை வரும் சேதிக்காய்
நாக்குத்தொங்க விழித்திருக்கும்
நாய்கள் நாம்

காட்டாற்று வெள்ளமாய்
கரைகிறது உடல்
நக இடுக்குகளில்
வலுவின் கீறல்களைச் சிதைத்தபடி

தேசப்பூக்கள்
ஒவ்வொன்றாய் உதிர்கின்ற போதும்
நம்பிக்கைகளை அணைத்தபடி
நாளைய இருப்பை நோக்கி
தொலைது}ரவிழிகள்


சாமிசுரேஸ், சுவிஸ்
07.12.2006

Series Navigation