தெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு எட்டாம் ஆண்டு

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

பெஞ்சமின் லெபோ


இடம் : சித்தி விநாகர் ஆலயம், லா கூர்னேவ்
நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2040 நளி (கார்த்திகை) 12, 13
காரிகை (சனிக்) கிழமை 28/11/2009 மதியம் 2 மணி முதல், இரவு 8.30 வரை
ஞாயிற்றுக் கிழமை, 29/11/2009 காலை 10.00 முதல், இரவு 8.00 மணி வரை

அன்புடையீர், அருந்தமிழ்ப் பற்றுடையீர், வணக்கம்!

செந்தமிழ்க் கமபன் திருவருளால் நம் பிரான்சுக் கம்பன் கழகம் 8 ஆம் ஆண்டுக் கம்பன் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.

கம்பன் தமிழ் பாடும் பணியைச் சிறப்புறச் செய்யத் தமிழகத்திலிருந்து தமிழ் அறிஞர் இருவர் வருகின்றனர். சிறப்புரை, ஆய்வுரை, தேனுரை, எழிலுரை, பட்டி மன்றம், சுழலும் கொற்போர், வழக்காடு மன்றம், கவியுரை, கவிமலர், தமிழிசை, நாட்டியம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

செந்தமிழ் கொஞ்சும் கம்பன் காவியம் தமிழரின் சொத்து! சிந்தை மயங்கச் செய்யும் சந்தம் ஒளிரும் விருத்தச் சோலை! அணிகள் மின்னம் பேழை! யாப்பின் அரண்மனை! உவமை பொங்கும் தேன் கடல்! கம்பன் படைத்த கவிதைக் கடலில் குளிப்போம்! உள்ளம் களிப்போம்! வாரீர்! உலக ரங்கில் ஓங்கு தமிழ் பரவத் தமிழினம் உயரச் செயற்படுவோம். கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்! வாரீர்!

சிறப்புச் சொற்பொழிவாளர்கள் :

நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல், திருவாரூர்
இலக்கியச் சுடர் த. இராமலிங்கம், சென்னை.

அன்புடன்
கவிஞர் கி. பாரதிதாசன், தலைவர், பிரான்சுக் கம்பன் கழகம்
செவாலியெ சிமோன் யூபர்ட், செயலர்.
பேராசிரியர் லெபோ பெஞ்சமின், செயலர்.
திருமிகு தணிகா சமரசம், பொருளாளர்.

Series Navigation

பெஞ்சமின் லெபோ

பெஞ்சமின் லெபோ