பத்ரிநாத்
‘ ‘சுப்பு .. அப்பா என்ன பண்றா பாரு.. ‘ ‘,
‘ ‘தூங்கிண்டு இருக்கறாப்பல தெரியறது.. வாயிலேர்ந்து என்னமோ வழியறதும்மா.. பக்கத்தில ஒக்கார முடியல.. சாப்டும் போது நினைச்சா கொமட்டிண்டு வர்றது.. ‘ ‘,
‘ ‘அம்மா.. போறும்.. சித்த சும்மா இருக்கியா.. எல்லாத்தையும் விளக்கிச் சொல்லாத
சகிக்கல.. அப்பறம் நேக்கு வாந்தி வந்துறப் போறது.. ‘ ‘,
‘ ‘ஆமாண்டா.. காதால கேக்கற போதே இப்படி இருக்கே.. ஒரு மாசமா ஒங்கப்பாவோட படாத அவஸ்த பட்டுண்டு இருக்கேனே.. நேக்கு எப்படியிருக்கும்.. ? ‘ ‘,
‘ ‘ஆமாம்மா.. ஒம் புருஷனுக்கு நீ சிஸ்ரூஷை பண்ணித்தான் ஆகணும்.. அது உன் தலையெழுத்து.. ‘ ‘,
‘ ‘சும்மா இருடா சுப்பு.. பாவம் அம்மா.. அப்பாவோட இந்தப் பாடுபட்டே நன்னா எளச்சுட்டா.. அம்மா என்னக் கேட்டா.. நீ ஒரு தடவ டாக்டரப் பாத்துடு.. ‘ ‘,
‘ ‘அடப்போடி.. அதுக்கெல்லாம் எங்க நேரம்.. ஏண்டா சுப்பு.. டாக்டர் என்னத்தான் சொல்லறா.. மறுபடியும் அட்மிட் பண்ணலாமா.. ‘ ‘,
‘ ‘போம்மா.. நீ ஒரண்ட.. இப்பவே முப்பதஞ்சிக்கு மேலே போயிடுத்து.. நல்ல காலம் இவர் பென்ஷன் பணம் இருந்துதோ.. நாம பொழச்சோமோ.. எம் மச்சினன் கொடுத்த ஐயாயிரத்தத் திருப்பித் தர சொல்லிட்டான்.. நா எங்க போறது.. அதான் டாக்டர் ஆத்தில வச்சு வைத்தியம் பாருங்கோன்னு சொன்னாரோல்யோ.. ‘ ‘,
‘ ‘ஒண்ணும் சரியாகலையே.. ‘ ‘,
‘ ‘அதுக்கு நா என்ன கருமத்தப் பண்றது.. இவர் தேறவும் மாட்டேங்கறார்.. போய்ச் சேரவும் மாட்டேங்கறார்.. ‘ ‘,
‘ ‘டேய் சுப்பு.. எண்டா இப்படிக் கத்தற.. பக்கதில கேக்கப் போறது.. சரி.. சரி.. அம்மா நீ அழாதே.. சுப்பு.. அம்மாவ அழ வைக்காத.. ‘ ‘,
‘ ‘அய்யோ.. ஏன்னா.. ஏன்னா.. அனாவசியமா டென்ஷன் ஆறேள்.. ஒங்களுக்கு ஏற்கனவே பிபீ.. இப்போ ஜாஸ்தியா ஆகிடப் போறது.. ‘ ‘,
‘ ‘சரிதான் போடி.. ஆனா ஆகட்டும்.. பெரிசா.. இவா ரெண்டு பேரும் ஏதோ என்னக் குத்தவாளி மாதிரின்னா பண்ணின்டு இருக்கா.. நா எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டுப் போயிருவேன்.. ஏன்டி.. சுந்தரி.. இவ்வளவு பேசறயே.. போயேன்.. ஒம் புருஷன் மெடிக்கல் லயன்லதான இருக்காரு.. போய் ஏதாவது மாத்தரய ப்ரீயா எல்ப்
பண்ணச் சொல்லவேண்டியதுதான.. ‘ ‘,
‘ ‘சரி.. சரி.. நீ எம் மேலே பாயாத.. மன்னி நா ஆத்துக்குப் போறேன்.. இதுக்கு மேலே நா இருந்தா.. சுப்பு தங்கைன்னுகூட பாக்க மாட்டான்.. என்னப் போட்டுக் கொதறிடுவான்.. நா போறேன்.. ‘ ‘,
‘ ‘சீச்சி.. ஆனாலும் ஒங்கண்ணாவ ரொம்பத்தான் கொடுக்காரன் ஆக்கற சுந்தரி.. அவர் சொல்றது சரிதானே.. ‘ ‘,
‘ ‘யேய்.. நீ சித்த வாய மூடிண்டு இரு.. நீயே பாருடி சுந்தரி.. போன மாசம்தான் நா பத்தாயிரம் பொரட்டிக் கொடுத்தேன்.. அப்பா நன்னா இருந்த போது என்னவெல்லாம் பண்ணாரு.. என் ஃபிரண்ட்ஸ் அப்பாக்களெல்லாம் மேற்படிப்புக்கு ஒரு கைட் மாதிரி உதவிய மாதிரி இவர் ஏதாவது என் எதிர்காலத்துக்கோ என் படிப்பு பத்தியோ ஏதாவது கவலப் பட்டாரா.. என்ன படிச்சான்.. என்ன உத்யோகம் பாக்கறான்னு எதப் பத்தியும் இந்த மனுசன் கவலையே படல.. அவர் நம்ம பத்தி ஒரு பொருட்டாவே மதிக்கல.. அப்படி இருக்கற வீடு வாசல் எல்லாம் என் சொந்த சம்பாத்தியத்தில வந்தது.. இவரு கான்டிரிப்யூஷன் ஒத்த விசயத்தச் சொல்லேன்.. பாக்கலாம்.. ஆனா நா இதெல்லாம் மனசில வச்சுகல.. முடஞ்சத பண்றோம்.. அதுக்கு மேலே இவர் உடம்பு தேறலயே.. ‘ ‘,
‘ ‘அது வேணா வாஸ்தவம்.. நன்னா இருக்கும் போது ஆடக்கூடாது.. அப்பப்பா.. என்ன ஆட்டம் போட்டார்.. சுந்தரி ஒங்கல்யாணத்த நிறுத்தக் கூட இந்தப் பிராம்ணன் தயங்கல தெரியுமோ.. ? இத்தன நாள் நா மறச்சு வச்சுண்டு இருந்தேன்.. இப்போ சொல்றேன் கேட்டுங்கோ.. இவர் சுந்தரி மாமனார்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா.. சுந்தரிக்கு கல்யாணத்தில இஷ்டமில்லன்னு தோண்றது.. ஒங்க ஆத்தில நெறய டிக்கெட்டு இருக்கோன்னு தயங்கறான்னு நைசா பேசிக் கலச்சிருக்கார்.. அப்பறம நா இவர் திட்டத்த தவுடு பொடியாக்கினேன்.. ஏன்.. சுந்தரி சம்பாதிக்கறா..
அவ கல்யாணம் ஆகிப் போயிட்டாள்னா.. சம்பளம் போய்டும்.. அப்பறம் இவர் கல்யாண செலவு செய்யணும்.. இதெல்லாம்தான்.. சம்பளம் வரக்கூடாது.. அவ்வளவுதான்.. ரேசுக்குப் போறதும், ஜர்தாவோ என்னவோ வாய்ல அதக்கிண்டு போறும்.. போறும்.. ஒரு வேள ஒங்கப்பா சாப்பிட்ட அந்த வஸ்துவாலத்தான் இப்போ வாயும் கையும் இழுத்துண்டுடுத்தோ என்னவோ.. சொன்னா கேட்டாத்தான அப்ப எம் பேச்சுக்கு என்ன மரியாத.. ஒரு மண்ணும் இல்ல.. ‘ ‘,
‘ ‘போறும்மா.. மேலே பேசாத.. அப்பறம் அப்பா மூஞ்சியே வெறுத்துடும்.. நா அப்பறம் இந்தாத்துப் பக்கமே தலையெடுத்துப் படுக்க மாட்டேன்.. நா ஏற்கனவே அந்த பஸ் ஸ்டாண்டு பிரச்சனக்கப்பறமாவே அப்பாகிட்ட பேசறத நிறுத்திட்டேன்.. நடக்கவே
சிரமப்படறாரேன்னு பஸ்ஸீக்கு அழச்சிண்டு போறேன்.. என்ன பண்ணா தெரியுமா.. ? பஸ் ஸ்டாண்டில எதோ புலம்பிண்டு வந்தார்.. சொல்றேன்.. சித்த நிறுத்துப்பான்னு.. சரிதான் போடி.. உன் தயவு ஒண்ணும் நேக்குத் தேவையில்லைன்னு சொல்றார்.. உன்னால நிக்கவே முடியலயே, எப்படி பஸ் பிடிப்பேன்னு சொல்றேன்.. யூ கோ.. ஐயாம் இன்த பப்ளிக் கேர்ன்னு, பெரிசா இங்கஷீஷ்ல பேத்தறார்.. நேக்கு வந்த ஆத்திரத்தில எங்கையோ போய்த் தொலையட்டும்னு வுட்டுட்டு வந்துட்டேன்.. போறும்.. போறும்.. ‘ ‘,
‘ ‘டேய் சுப்பு.. ரூம்ல ஒரு எட்டுப் பாரேன்.. நேக்கு ஒக்கார்ந்தா எழுந்துருக்க முடியல.. ‘ ‘,
‘ ‘அம்மா.. இங்க வந்து பாரு..யூரின் போயிருக்கார் போலருக்கு.. பேன் மாத்து.. நாத்தம் தாங்கல.. ‘ ‘,
‘ ‘சரி.. சரி.. இதோ வர்றேன்.. ஈஸ்வரா.. எல்லாம் ப்ரார்த்தம்.. ‘ ‘,
‘ ‘டேய் போறும்டா.. ஒரே வெறுப்பா இருக்கு.. வேற ஏதாவது பேசலாமே.. ‘ ‘,
‘ ‘ஆமான்னா.. ஒரே போரா இருக்கு.. ‘ ‘,
‘ ‘என்ன மன்னி இதான் அந்த இருபத்து ஒம்போது இன்ச் கலர் டிவியா.. பெரிய
ஸ்க்ரீனா இருக்கு.. எத்தன ஆச்சு.. ‘ ‘,
‘ ‘பதினேழு.. பழைய டிவி நாலாயிரந்தான் போச்சு.. ‘ ‘,
‘ ‘ செக சூப்பரா இருக்கு.. நா அவர்ட்ட சொல்லணும்.. ‘ ‘,
அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியானராமமூர்த்தியாரின் கண்கள் பனித்திருந்தது.. ஏதோ சொல்ல நினைத்தார்.. ஆனால் அவர் நா எழு மறுத்தது.. செயலற்ற கால்களைப் பார்த்தார்.. ‘ஆண்டவா.. இப்போதே என் உயிர் பிரியக்கூடாதா.. ‘, என்று உருகினார்..
prabhabadri@yahoo.com
- அவனது கவிதைகள்
- நீள்கிறது கவலை
- பருவகாலம்
- வாசுகன் ஓவியக்கண்காட்சி 06th july 2005
- நினைவுக் கூட்டம் மறைந்த யாழ் பரி.யோவான் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜாவின் 20 வது நினைவுக் கூட்டம்;.
- International Thirukkural Conference, July 8-10, 2005, Smith Auditorium, Howard Community College, 10901 Little Patuxent Parkway
- AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு
- தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
- விடிகின்ற பொழுதாய் கவிதை
- விண்வெளியில் செல்லும் வால்மீனுக்குப் பேரடி கொடுத்த பூமியின் எறிகணை! (Earth ‘s Deep Impact Space Probe Hits the Comet)
- கீதாஞ்சலி (30) கனவில் உன்னிசைக் கானம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- குடை வாசிக்கும் கவிதை
- எது காதல் ?
- நான் மரணித்து விட்டேன்
- தாயின் உயிர்க்கொடிகள்
- பிரிவோம்…சந்திப்போம்!
- உயிர்த்திருத்தல்
- பச்சை மிருகம்
- பெரியபுராணம் – 47 சண்டேசுர நாயனார் புராணம் தொடர்ச்சி
- தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
- இந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்
- இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்
- புட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்
- வங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1
- AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு
- புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)
- அதீதப் புள்ளி
- தீவுகள்..
- வளைந்து போன வீரவாள்