திண்ணை என்ன செய்யும் என்று யாரிடமும் தெரிவிக்க வில்லை

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

திண்ணை குழு


கடந்த திண்ணை இதழில் வெளிவந்த மு சுந்தரமூர்த்தியின் கடிதத்தின் ஒரு வரி பற்றி ஒரு விளக்கம் அளிப்பது திண்ணையின் கடமை ஆகிறது. ‘இனிமேல் உங்கள் (மலர்மன்னன்) மேல் அடி விழாதவாறு திண்ணை ஆசிரியர் குழுவினர் பார்த்துக் கொள்வார்கள். ‘ என்று மு சுந்தரமூர்த்தி எழுதியுள்ளார்.

திண்ணை ஆசிரியர் குழு என்ன செய்யும் என்று சுந்தரமூர்த்தியிடம் தேடிச் சென்று எதுவும் நாங்கள் சொல்லியதில்லை. ஆதலால் இது நகைச்சுவையாய்த் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.

மலர் மன்னனையும் சரி, சுந்தரமூர்த்தியையும் சரி திண்ணை ஆசிரியர் குழு அழைத்து வரவும் இல்லை, திண்ணை யாரையும் எழுதப் பணிப்பதும் இல்லை. சுதந்திரமாக தாமாக முனைந்து எழுதுகிற எல்லோரையும், அனைத்துக் கருத்தினரையும் ஊக்குவிப்பதே திண்ணையின் பணி என்பது கடந்த காலச் சரிதத்தைக் காண்பவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

மற்றவர் கருத்தை மதித்து எதிர்வினை ஆற்றுங்கள், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிருங்கள் என்ற எங்களின் வேண்டுகோள் சுந்தரமூர்த்திக்கு தர்ம அடியாகப் படுகிறது என்றால் தவறு எங்களிடம் இல்லை.

திண்ணை வழக்கம் போல மாற்றுக் கருத்துகளுக்குக் களம் அமைத்துத் தரும் விதமாகத் தொடர்ந்து செயல்படும்.

திண்ணை குழு

Series Navigation

திண்ணை குழு

திண்ணை குழு