ஞானோபதேசம்

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

ராமசந்திரன் உஷா


டென்ஷன்,டென்ஷன் என்று நாலாபக்கத்தில் இருந்து வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தவித்துப்போனார் கிருஷ்ணன்.நண்பர் வெங்கடேசனிடம் யோசனை கேட்கலாம் என்று அவர் வீட்டுக்கதவைத்தட்டினார்.அவர் மருமகள் தான் கதவை திறந்தாள்.

என்னமா விசேஷம் ? ஒரே கூட்டமா இருக்கு, வெங்கடேசன் இல்ல ‘ கேள்வியாய் கேட்டார்.

மாடில டி.வி சிரியல் எடுக்கிறாங்க ‘என்று வாயலாம் பல்லாய் பதிலளித்தாள்.

அவுங்களுக்கு ஒரு ஊஞ்சல் தேவையாம்,மாமா அவுங்க அக்கா வீட்டுல இருந்து கொண்டுவர போயிருக்கார்.இப்ப வந்துவிடுவார்,நீங்க உள்ளே வாங்க ‘ என்று உபசரித்தாள்.

அவள் கொடுத்த காப்பியை குடித்துவிட்டு,அவளுடன் மாடிக்கு போனார்.

டைரக்டர் கம் கதாசிரியர் கம் வசனகர்த்தா விமலாதேவியை அறிமுகம் செய்துவைத்துவிட்டு போனாள்.குறுந்தாடியுடன் பார்க்க ஆள் ஜம்மென்று இருந்தார்

பரபரவென்று அலைந்துக்கொண்டு இருந்த விமலாதேவி ,கிருஷ்ணனின் பக்கத்தில் கிடந்த சேரில் அமர்ந்தார். அஸோசியேட் டைரக்டர் ரமேஷ்,அசிஸ்டண்ட் டைரக்டர் கலைராஜா மற்றும் அருள் அருகில் வந்தனர்.

எல்லோரும் வந்தாச்சா ? ஷுட்டிங் ஆரம்பிக்கலாமா ? ‘ ‘தாலி ‘ தானே என்றார் டைரக்டர்.

இல்ல சார்!இது ‘பெரியப்பா ‘ஷுட்டிங்!

பதினஞ்சு சீரியல்ஸ் எழுதுகிறேனா,சில சமயம் கொழம்பிடரேன் என்று பெருமையுடன் அலுத்துக்கொண்டார் டைரக்டர்.

இன்னும் ஹீரோ வரல சார்!

சார், சிஸ்டர் கேரக்டர் சிந்தியா,ரகசிய கல்யாணம் செஞ்சிகிட்டாங்களாம்,இப்போ நாலுமாச பிரக்னட் சார் ‘ கவலையுடன் தெரிவித்தார் கலை. பொழுதுப்போகாமல் அவர்கள் பேச்சை கேட்க ஆரம்பித்தார் கிருஷ்ணன்.

வயிறு தெரியுமே!ஆள மாத்திடலாமா!

யாரோட சிபாரிசு,மறந்திட்டாங்களா சார்! என்றார் ரமேஷ்.

ஒரு மாசமா அவுங்களுக்கு ஷுட்டிங் கிடையாதா,இன்னைக்குப்பார்த்ததும் நல்லா தெரியுது சார், இப்ப எடுக்கிறதது பொண்ணு பார்கிற சீன்,அப்புறம் கல்யாணம்,ஆன்டி கிளைமாக்ஸ் சார்

டைரக்டர் ஒரு நிமிஷம் யோசிக்கிறார்

அந்த பொண்ணு கல்யாணம் சொன்னவுடன்,தற்கொலைக்கு முயற்சி பண்ணுது, ஆனா காப்பாத்திடராங்க, யாரோ ஒருவன் கார்ல லிப்ட் கொடுத்து,அவளை கெடுத்துட்டதாகவும்,இப்ப பிரக்னட்ன்னு சொல்லி அழுவுது. காப்பாத்தறது, ஆஸ்பிட்டல் சீன்,எல்லோரும் அழுவுறதுன்னு எக்ஸ்ரா பத்து எபிசோட் ஓட்டிடலாம், பொண்ணு பார்க்க வர பையனே வாழ்வு கொடுக்கிறன்,இத சொல்லிக்காட்டி மாமியார் கொடுமபடுத்துராங்க! கடைசில கெடுத்தது புருஷனேன்னு சொல்லிடலாம்

சூப்பர் சார் என்று கைதட்டுகிறார்கள். கிருஷ்ணன் ஆர்வமாய் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

சார்,பெரியப்பாவ நடிக்கிறாரே ராமசுப்பு ,பேமண்ட் ஜாஸ்திக்கேக்கிறாரு!

ஆமா சார்! பாபால நடிச்சதுல இருந்து அவரோட லொள்ளு தாங்கல!

அவுருமட்டுமா நடிச்சாரு! இங்க இருப்பவங்களிலே பாதிப்பேரு அதுல நடிச்சிருக்காங்க!

பேசாம கொன்னுடு அவர என்றார் விமலா.கிருஷ்ணன் அதிர்ச்சியடைகிறார்.

சார்!ஏதோ ரெண்டு,மூணு சீட்டிங் கேஸ்ல உள்ளே போயிருக்கேன்,அதுக்காக கொலை எப்படி சார் ‘ அழமாட்டாத குறையாய் கேட்கிறார் அருள்.

புது பையன்னு காட்டிட்டியே! சீரியலிருந்து துகெ¢க சொன்னேன்யா!

அது முடியாது சார்! அவுரு யோசனப்படிதான் வீட்டுல எல்லாரும் நடந்துக்கிறாங்க!

சொல்லிப்பாரு, கேக்கலைன்னா , அவரு படத்த நடுவீட்ல மாட்டு!அசீரீரீயா அறிவுரை சொல்லுவாரு!டப்பிங் வாய்ஸ்தானே அவருக்கு!

கிருஷ்ணன் பிரமித்து போகிறார்.கொஞ்சம் கூட டென்ஷன் படாமல் எப்படி சமாளிக்கிறார் என்று.

இன்னுமா ஹீரோ வரலை என்று எல்லொரும் முணுமுணுக்கின்றனர்.அப்போது ஹீரோ முகம் வீங்கலுடன் வருகிறார்.ஏதோ அலர்ஜி ஆயிடுத்தாம்.மேக்கப் போட கூடாதாம்.

ஒரே நிமிடம் யோசிக்கிறார், ‘ அவ்வளவுதானே!வீட்டுல செயின் காணம போயிடுது!பழி ஹீரோ மேல! செயின் கிடைக்கிறவர யாரையும் நிமிர்ந்து பார்க்கமாட்டேன்னு சூளுரைக்கிறார்.பத்து நாள்ல் மூஞ்சி சரியாயிடும்,செயினும் கிடைச்சிடுச்சுன்னு சொல்லிடலாம் ‘.

பிரமிப்பின் உச்சத்தை அடைகிறார் கிருஷ்ணன்.சார் என்று கூவிக்கொண்டே டைரக்டர் கையை பிடித்து குலுக்குகிறார்.

எனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை எப்படி தீர்க்கறதுன்னு கொளம்பிப்போய் இங்க வந்தேன்,ஆனா நீங்க டென்ஷனே படாம பிரச்சனைகளை என்னமா டால் பண்ணுறீங்க! எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டுன்னு எனக்கு உணர்த்திட்டாங்க ! ரொம்ப தாங்ஸ் ‘ என்று சொல்லிவிட்டு கிளம்பினார் கிருஷ்ணன்.

முகத்தில் வழியும் பெருமையுடன் சுற்றி இருப்பவர்களை பார்க்கிறார்.அப்போது அவருடைய செல் போன் அடிக்கிறது.கலைராஜா எடுத்துப்பேசுகிறார்.

வீட்ல இருந்து அம்மா பேசினாங்க! 10th படிக்கிறாரே ,உங்க மகன் சந்தோஷ் கிளாஸ் டெஸ்ட்ல பெயில் ஆயிட்டாராம்!சீக்கிரம் ஷுட்டிங் முடிஞ்சிட்டு வீட்டுக்கு வர சொன்னாங்க! என்று சாதாரணமாய் சொன்னார்.

என்ன பெயில் ஆயிட்டானா ? என்று கத்திக் கொண்டு நாற்காலியில் சரிகிறார் டைரக்டர் விமலாதேவி.

***

ramachandranusha@rediffmail.com

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா