ச. மணி ராமலிங்கம் கவிதைகள்
ச. மணி ராமலிங்கம்
விதவையின் விசும்பல்
—–
கிளியின் பச்சை
வானத்தின் நீலம்
மஞ்சள் வெயில்
இரவின் கருப்பு
யாவும் தெரிகிறது
இப்பொழுதான் வண்ணமாய் ……
————————————————————————–
நீயே சொல் பெண்ணே..
—
நீ இல்லாத
நான்
விடை இல்லா
கேள்வி…
நீ இல்லாமல்
போனால்
அதுவே என்
தோல்வி….
நீ என்ற
ஒற்றை சுழியில்
மாட்டி கொண்டோம்
நானும் என்
கேள்விக்குறியும் …….
விடை பெறுவது
என் கேள்வியோ
இல்லை நானோ
உன்னிடமிருந்து….
நீயே சொல்
பெண்ணே….
காத்திருக்கிறோம்
நானும் என்
கை கடிகார நொடி முள்ளும்….
——————————————————–
ச. மணி ராமலிங்கம்