சொறிதல்…

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

முத்துநிலவன்


சொறிந்து விடு!
சொறிந்து விடு!

உன் நகங்களில் அழுக்குச்சேர
அவன் முதுகு ரணமாக-
சுகமாக
சொறிந்து விடு!

சொல்லித் தெரிவதில்லை
சொறிதல்!
மன்மதக் கலையைவிடவும்
ரகசியமானது,
மதுவைவிடவும் போதையானது!

விரகதாபத்தை விடவும்
இந்த-
விரல்களின் தாபம்
வேகமானது!

நீ கொடுக்கும்
சுகவெறியில்-
முகத்தைவிடவும்
நகத்தையே எதிர்பார்த்து
அதோ அவன்
நரங்கிப்போய்விட்டான்!

உனது தடவலுக்காய்த்
தடுமாறி,
மனசெல்லாம்
சொறிபிடித்து
அதோ அவன்
சாபம் வேண்டியே
தவம் இருக்கிறான்!

இதில்-
பாவம் எது ?
பாவி யார் ?
அதுபற்றி
ஆருக்குக் கவலை ?
நீ சொறிந்துவிடு!
சொறிந்துவிடு!

muthunilavan@yahoo.com

Series Navigation

முத்துநிலவன்

முத்துநிலவன்