சொன்னால் விரோதம் ?

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

அனந்த்


என்னால் எதுவு மியலும் என்றே எதிலும் தலையிடுவோர்
பின்னா லிருத்தல் பிழையென் றவையில் பிறர்முன் தானிருப்போர்
மன்னா தலைவ எனமுன் புகழ்ந்து மறைவி லிகழ்ந்துரைப்போர்
யின்னார் தவறை எடுத்துக் காட்டிச் சொன்னால் விரோதமிலை
(1)

பெண்ணால் பிறந்து பெண்ணால் வளர்ந்து பெண்ணால் பெருமையுற்றோர்
கண்ணால் அவர்தம் துயரம் கண்டும் மேலும் கடிந்துரைப்பார்
விண்ணில் உறையும் வாணி திருவை வேண்டித் தவமிருப்பார்
மண்ணி லிழிந்தோ ரிவர்தம் மடமை சொன்னால் விரோதமிலை (2)

முன்னா ளிறைவன் மொழிந்த கவியில் முழுமை யில்லையென்று
தன்னால் முடிந்த அளவில் தவறை உணர்த்திச் சரித்திரத்தில்
பொன்னால் தனது பேரைப் பொறித்தோன் பிறந்த தமிழகத்தில்
சொன்னால் விரோதம் வருமென் றிழிவைச் சுட்டா திருப்பதுமேன் ? (3)

Series Navigation

அனந்த்

அனந்த்