சூரியச் சிறகுதிர்ந்து..

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


********************************

கலையும் மேகங்களாய்
நகர்ந்து கொண்டேயிருக்கின்றன
பழக்கங்களும் உறவுகளும்.

நிமிடத்துக்கு நிமிடம்
மாறும் மனநிலையில்
கலையவும் உருவாகவும்..

கனத்த மேகங்கள்
உருண்டு திரண்டு முரள்வது
பேரிடியாய் இடம்புரட்டி

முணுமுணுப்போடும்
கூதலோடும் கலையாமல்
இருளோடியபடி பிடிவாத்துடன்.

கரைந்து இறங்குவதும்
உரைந்து சிதறுவதும்
வரையாத பிரிவின் துயர்.

நகர்வதே வாழ்வானதில்
நகர்ந்து செல்லுதல்
துன்பம் விளைவித்து

நெய்தலும் முல்லையும்
மருதமும் குறிஞ்சியும்
பாலையும் நீரோடி புரையோடி..

ஒவ்வொருநகர்தல் முடிவிலும்
ஒலியெழப்பெய்து
ஒளி குடித்த மயக்கத்தில்

சூரியச்சிறகுதிர்க்கும் வானவில்கள்
யவ்வனத்தை கிளறியபடி
கிழக்கு மேற்கை இணைக்கின்றன.

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்