சாரல்களின் மெல்லிசை
Published April 10, 2011 • By
தேனு
தேனு

மழை பயிற்றுவிக்கும்
பேச்சுத்துளிகள்
சில யுகங்களை
கடந்திருக்கும் யதார்த்தம்
நமக்கு மட்டுமே உட்பட்டது..
சாரலில் மயங்கியிருந்த
உன் மடிமீது
துயில் கொள்கின்றன
சொடுக்கப்படும்
என் விரல்கள்..
நிலவுகளை அள்ளித் தெளிக்கும்
உன் கரங்களில்
என்னை முழுதாய்
ஏந்திக் கொள்ளும்
அழகினையும் கற்றுத்தான் வைத்திருக்கிறாய்..
நிதம் நமக்கான
குறிப்புகளின் வெற்றிடத்தை
நிரப்பி விடுகின்றன,
அள்ளியெடுத்துக் கதைக்கப்படும்
ஒன்றிரண்டு வண்ணக்கவிதைகள்…
வெட்கத்தோடு நூலிழையில்
பின்னப்படும் தென்றல்..
அது வீசும் உன் முகவரியில்
இப்படித்தான் ஒருசில சாரல்கள்
காதல் நுகர்கின்றன…
இசை மழைகிறது… மழை இசைகிறது…
– தேனு [thenuthen@gmail.com]