சாகித்திய அகாதமியின் : Writers in Residence

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

சுப்ரபாரதிமணியன்



சாகித்திய அக்காத‌மியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் சமீபத்தில் சாகித்திய அகாதமி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மாதாந்திர விசயமாக, சாதாரணமாகி விட்டது.

சாகித்திய அகாதமி இவ்வாண்டு கீழ்க் கண்ட எழுத்தாளர்களுக்கு Writers in Residence என்ற திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு ரூ 25,000/ வீதம் இலக்கியப் பணிக்காக உதவி வழங்கியுள்ளது .தோப்பில் முகமது மீரான் , சா கந்தசாமி, பொன்னீலன், ஈரோடு தமிழன்பன்,, பிரபஞ்சன், ஆகியோர் அவ‌ர்கள் ஆவர்.

இத்திட்டத்தின் கீழான இலக்கிய நிகழ்ச்சியொன்றை தோப்பில் முகமது மீரான் திருநல்வேலியில் இந்து கல்லூரியில் நடத்தினார். நானும் கலந்து கொண்டேன். புதுமைப்பித்தன், பாரதியார், தொமுசி ரகுநாதன், திகசிவசங்கரன்,, போன்ற இலக்கிய
முன்னோடிகள் படித்த பழமையானக் கல்லூரி என்பதால் நானும் புளங்காகிதம் அடைந்தேன்.கல்லூரி வளாகத்துக்குள் தென்பட்ட புது விநாயகர் கோவில் கும்பவிசேக இரைச்சல் தொந்தரவு தந்த‌து. மாணவர்களிடம் பேசுவது கொஞ்சம் சங்கடமானது. நம்மை நாமே அறிமுகப்படுத்திக் கொள்வது கொடுமைதான்.நானும் என் படைப்புகளும் என்ற தலைப்பில் பேசினேன். கவிஞர் கிருசி இலக்கிய போக்குகள் என்ற தலைப்பில் பேசியவர் திருநல்வேலி , கோவில்பட்டி எழுத்தாளர்களை மட்டும் அடையாளம் காட்டி குசும்பு செய்தார்,. வழக்கமான திருநல்வேலி குசும்புதான் அது.

தோப்பில் மீரானின் சமீபத்திய மிக முக்கியமான நாவலான “அஞ்சு வண்ணம் தெரு” பற்றித்தான் பேச விரும்பி கட்டுரை தயாரித்திருந்தேன். அந்த அரங்கில் கிருசியைத் தவிர வேறு யாரும் அந்த நாவலைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்று பட்டது அக்கட்டுரையை இந்த இதழ் “தீராநதி:”யில் வாசியுங்கள். நித்தில், கருப்பையா போன்ற நவீன இலக்கிய வாசிப்பில் அக்கறை கொண்ட ஆசிரியர்களைக் காண முடிந்தது. குற்றாலத்தில் தண்ணீர் அதிகம் இருந்தாலும் கூட்டம் இல்லை. திருநல்வேலி கதிர், தாமிரபரணி கரையில் பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பது பற்றி படம் எடுத்து சிரமப்பட்டவர் இப்போது அதை யாரும் கண்டு கொள்வதில்லை.சுலபமாக சுரண்டல் நடக்கிறது என்கிறார். பிளச்சிமடா ஞாபகம் வந்நது. அங்கேயே முன்பு மாதிரி கோக்காகோலா தொழிற்சாலை இயங்குகிறது.பிளாச்சிமடாவில் நடைபெற்ற ஒரு சுற்றுசூழ‌ல் போராட்ட நிகழ்ச்சிக்கு நானும் , மகுடேசுவரனும் கலந்து கொண்டு எதிர்ப்பு கவிதைகள் படித்தோம்.வநதனா சிவா, அருந்ததி ராய் போன்றோரை சந்திக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது.மலையாள கவிஞர் விஜயகுமார் குனிசேரி அக்கறையுடன் கலந்து கொண்டிருந்தார்.

தாமிரபரணி இன்னும் திருப்பூரின் நொய்யலாகி விடவில்லை என்பதுதான் சற்று ஆறுதல்.

= சுப்ரபாரதிமணியன்

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்