கேள்விகளால் வாழும் மரணம்

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

வருணன்



வாசல் இல்லாத வீடு
இருந்தும் ரகசியங்கள் கசிவதில்லை
அந்தியில் வீழ்ந்தது நம்பிக்கையோடு ஆதவனும்
படரும் இருட்டில் பதுங்கும் குரோதம்
ஷெல்லடித்தல் செத்துப் போனதாம்
துப்பாக்கி ரவைகள் நித்திரை கொள்ளுதாம்
நம்பித் தொலைப்போம்
வழியேது?
இனியாகிலும் காக்கட்டும் சாக்கிய முனி
மாக்களிடமிருந்து
எம் பெண்டிரின் யோனிகளை
‘பிரபா… நீ என்னை தேடியிருப்பேனு தெரியும்…’
கசிகிறது பண்பலையில் பாடல்
இன்னா செய்தாரை ஒருத்தல்…
முடிவதில்லை எல்லா தருணங்களிலும்.
jolaphysics@gmail.com
– வருணன்

Series Navigation