குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

ப.மதியழகன்


வானம் முறுவளித்து
தனது சோர்வை
வெளிக்காட்டியது
பூமி, ஒரு வெற்றிடம்
தனது வாழ்வில்
தோன்றியிருப்பதை
உணர்ந்து கொண்டது
காற்று சுழன்று சுழன்று
உன்னதத்தைத் தேடியது
மழை மண்ணை
முத்தமிடுவதற்கு
முதல் முறையாக
அலுத்துக் கொண்டது
நதி வெள்ளம்
கடலில் கலந்து
தனது சுயத்தை இழக்க
விரும்பவில்லையென
பிடிவாதம் கொண்டது
அக்னி சாட்சியாக நடைபெறும்
அனைத்தும்
உண்மையானதல்லவென்று
நெருப்பு உணர்ந்து கொண்டது
அவ்வப்போது சீற்றம் கொள்வதும்,
உள்ளிழுப்பதும்
கடலுக்கு வாடிக்கையானது
குழந்தைகள் உலகத்தை
புரிந்து கொள்ளாத மானுடத்தால்
வாழ்க்கை தன் சுவாரஸியத்தை
முற்றிலும் இழந்தது.

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>